hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore

Lowest price this festive season! Code: FIRST10

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • பைலோனிடல் நீர்க்கட்டி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை. arrow

In this Article

    பைலோனிடல் நீர்க்கட்டி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

    Getting Pregnant

    பைலோனிடல் நீர்க்கட்டி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பைலோனிடல் நீர்க்கட்டி என்பது பொதுவாக முடி மற்றும் சிதைந்த தோல்களை உள்ளடக்கிய ஒரு கட்டி போன்று இருக்கும். முடி பைலோனிடல் நீர்க்கட்டியானது இடுப்புக்கு கீழே இரு பிட்டங்களை இணைக்கும் வால் எலும்பில் உச்சியை நோக்கி காணப்படும்.

    உண்மையில், இந்த பைலோனிடல் நீர்க்கட்டி என்பது என்ன?

    முடி தோலில் ஊடுருவி, அந்த இடத்திலேயே தங்கும் போது பைலோனிடல் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. ஒரு பைலோனிடல் நீர்க்கட்டியில் தொற்று ஏற்பட்டால், அதில் சீழ் கட்டுவதன் மூலம் பைலோனிடல் நீர்க்கட்டியில் நாட்கள் செல்லச் செல்ல வலி அதிகமாகிக் கொண்டேயிருக்கும். முடி பிலோனிடல் நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் அல்லது அதை சிறிதளவு கீறி அதிலிருந்து சீழை அகற்றலாம்.

    பைலோனிடல் நீர்க்கட்டிகள் பெரும்பாலும் இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. டிரக் டிரைவர்கள் போன்ற நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு பைலோனிடல் நீர்க்கட்டி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    பைலோனிடல் நீர்க்கட்டிக்கான காரணங்கள்

    பைலோனிடல் நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், பெரும்பாலான பைலோனிடல் நீர்க்கட்டிகள், நமது எபிடெர்மஸில் உறுதியற்ற முடிகள் நுழைவதால் உருவாகின்றன.

    பைலோனிடல் நீர்க்கட்டிகள் பிறவியிலேயே (அவற்றுடனேயே பிறக்கிறோம்) இருப்பவை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. அவை ஆரம்பத்தில் தவறான இடத்தில் உள்ள கரு உயிரணுக்களிலிருந்து உருவாகி அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் காயத்திலிருந்து (ஜீப் ஓட்டுநரின் சுகமின்மை) வளர்கின்றன. சிறிய முடிகள் மற்றும் தோல்கள் (இறந்த தோல் செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள்) இடுப்புக்குக் கீழே பிட்டத்தின் மேல் பிளவில் உள்ள தோலின் துளைகளில் ஒட்டிக்கொண்டு, பைலோனிடல் சைனஸ் சிஸ்ட் எனப்படும் "நீர் சேர்க்கை" அல்லது ஒரு பாக்கெட்டை உருவாக்குகிறது, இது நாளடைவில் சீழ் நிறைந்து ஒரு புண்ணாக விரிவடைகிறது.

    இந்த சீழ் தோலுக்கு அடியில் வளர்கிறது (தோலடி) மற்றும் இது வடு திசுக்களை விட்டுவிட்டு செல்வதால் அதில் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படலாம்.

    உராய்வு மற்றும் அழுத்தம் :

    ஒரு தோல் மற்றொரு தோல் மீது உராய்தல், இறுக்கமான உடைகள், அதிக நேரம் பைக்கில் செல்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது அதுபோன்ற சூழ்நிலைகள், போன்றவை - முடியை தோலுக்குள் தள்ளும். உடல் முடிக்கு அருகில் ஒரு நீர்க்கட்டியை உருவாக்குகிறது, இது ஒரு அந்நிய பொருளாகக் காணப்படுகிறது.

    சில குழந்தைகள் சாக்ரல் டிம்பிளுடன் பிறக்கின்றன. அக்குழந்தையின் பிட்டம் மடிப்புக்கு மேலே ஒரு பள்ளம் தோன்றும். ஒருசாக்ரல் டிம்பிள் வீக்கமடைந்தால் பைலோனிடல் நீர்க்கட்டி உருவாகலாம்.

    பைலோனிடல் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்

    ஒரு பைலோனிடல் நீர்க்கட்டியில் தொற்று ஏற்படவில்லை என்றால் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீர்க்கட்டியில் தொற்று ஏற்பட்டிலிருந்தால் அதன் அறிகுறிகள் பின்வருமாறு இருக்கும்:

    • காய்ச்சல்

    • பிட்டத்தின் மேற்பகுதியில் அசௌகரியமாக உணர்தல்

    • அடி முதுகில் வலி ஏற்படுதல்

    • வீக்கம்

    • சிவந்திருத்தல்

    • பைலோனிடல் நீர்க்கட்டிலிருந்து இரத்தம் அல்லது சீழ் வழிதல்

    • பயங்கர துர்நாற்றம்

    பைலோனிடல் நீர்க்கட்டிக்கான சிகிச்சைகள்

    உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பைலோனிடல் நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவர்கள் அதற்கான தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை வழங்குவார்கள்.

    உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளின் தீவிரத் தன்மையைப் பொறுத்து, அறுவை சிகிச்சை மூலம் பைலோனிடல் நீர்க்கட்டியை அகற்றுலாம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படாமலும் போகலாம். அறுவை சிகிச்சை செய்வதைவிட, பிலோனிடல் நீர்க்கட்டி சிகிச்சைக்கு பல்வேறு மாற்று விருப்பங்கள் உள்ளன, இவை உட்பட:

    • நீர்க்கட்டியில் உள்ளவற்றை வெளியேற்றுதல் :

    மருத்துவர்கள் தங்கள் கிளினிக்குகளிலேயே இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். பாதிக்கப்பட்ட நீர்க்கட்டியானது சிறிய கீறல் (வெட்டு) மூலம் திறக்கப்பட்டு அதில் உள்ளவை வடிகட்டப்படும்.

    • ஊசி மூலம் உட்செலுத்துதல் :

    மிதமான மற்றும் சிறிய அளவிலான பிலோனிடல் நீர்க்கட்டிகளை ஊசி (பீனால், ஒரு அமில இரசாயனக் கூறு) செலுத்திக் கொள்வதன் மூலம் குணப்படுத்தவும் தடுக்கவும் முடியும்.

    • ஆண்ட்டிபயாடிக்குகள் :

    பைலோனிடல் நீர்க்கட்டி ஆண்ட்டிபயாடிக்கானது தோலில் ஏற்படும் வீக்கத்தைக் குணப்படுத்தும். இருப்பினும், வெறும் ஆண்ட்டிபயாடிக்குகளால் மட்டுமே பைலோனிடல் நீர்க்கட்டிகளை குணப்படுத்திவிடமுடியாது.

    • லேசர் சிகிச்சை :

    லேசர் சிகிச்சையானது அதற்குக் காரணமான முடியை அகற்ற உதவுகிறது, இல்லையெனில், அது உள்நோக்கி வளர்ந்துகொண்டே இருப்பதோடு பைலோனிடல் நீர்க்கட்டிகளை மறுபடி மறுபடி ஏற்படுத்தும்.

    சிகிச்சை பெறுவதற்கிடையே, நோயாளிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு ஹாட் வாட்டர் பேகை கொண்டு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் ஏதேனும் அசௌகரியத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யலாம் அல்லது காற்றடைக்கப்பட்ட இருக்கை அல்லது மெத்தையைப் பயன்படுத்தலாம்.

    பைலோனிடல் நீர்க்கட்டி அறுவை சிகிச்சை

    பைலோனிடல் நீர்க்கட்டியில் கணிசமான வடு திசு அல்லது நாள்பட்ட சைனஸ் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த நோயாளிக்கு சீழ் அகற்றுதல் அல்லது பிலோனிடல் நீர்க்கட்டி அறுவை சிகிச்சை தேவைப்படலாம். பைலோனிடல் சிஸ்டெக்டோமியானது சைனஸ் தடங்களுடன் சேர்ந்து பைலோனிடல் நீர்க்கட்டிகளையும் அகற்ற உதவுகிறது. காயத்தை கம்பிவலை அல்லது தையல் மூலம் மூடலாம். க்ளெஃப்ட் லிஃப்ட்/மாடிஃபைடு கரிடாகிஸ் சிகிச்சையானது ஆழமான திசுக்களை நீக்காமல் சேதமடைந்த தோலை மட்டும் நீக்குகிறது, மேலும் நன்கு குணமடைவதற்காக பாதிக்கப்பட்ட பக்கத் தோலை மட்டும் கீறல் மூலம் அகற்றுகிறது.

    பைலோனிடல் நீர்க்கட்டி அறுவை சிகிச்சையின் மற்ற முறைகளில் லிம்பெர்க் பிளாப், இசட்-பிளாஸ்டி மற்றும் ரொட்டேடிங் பிளாப் போன்ற குறிப்பிடத்தக்க அளவு திசுக்களை அகற்றும் பிளாப் சிகிச்சைகளும் அடங்கும்.

    ஒருவேளை நோயாளி கடுமையான தொற்று (செல்லுலிடிஸ் அல்லது செப்சிஸ்) அல்லது நோயெதிர்ப்பு குறைபாடு (எச்.ஐ.வி/எய்ட்ஸ், புற்றுநோய் கீமோதெரபி, ஸ்டீராய்டு சிகிச்சை அல்லது பிற நோயெதிர்ப்பு-மாடுலேட்டிங் மருந்துகள்) நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், நோயாளிக்கு பிலோனிடல் சிஸ்ட் ஆண்ட்டிபயாடிக் சிகிச்சைக்கான பொதுவான பரிந்துரை அளிக்கப்படலாம் அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

    பிலோனிடல் நீர்க்கட்டி நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளில் ஒன்றான மெட்ரோனிடசோல் வழங்கப்படுகிறது. கிருமிகள் வளர்ச்சியத் தடுப்பதன் மூலம் சீழ் கட்டியை குணப்படுத்த இது உதவும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மெட்ரோனிடசோலை வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது நரம்புகளில் ஊசி மூலம் உட்செலுத்திக் கொள்ளலாம்.

    பைலோனிடல் நீர்க்கட்டியிலிருந்து குணமடைதல்

    பைலோனிடல் நீர்க்கட்டி அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைவது என்பது, சிகிச்சைக்காக திறக்கப்பட்ட கீறல் ஆறாமல் உள்ளதா அல்லது ஆறிவிட்டதா என்பதைப் பொறுத்தது. ஒரு திறந்திருக்கும் கீறலில் வடு திசுக்களை இணைப்பதிலிருந்து குணமடைய எட்டு வாரங்கள் வரை ஆகலாம் (திசு வெளியேற்றப்பட்டு, அந்த இடம் வெற்றிடமாகி, மற்ற பகுதிகளெல்லாம் குணமாகும்). கீறல் மூடிவிட்டால் (மருத்துவரால் தைக்கப்பட்டது) விரைவாக குணமடையலாம், ஆனால் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து இதில் உள்ளது, இது குணமடைவதில் இருந்து இன்னும் தாமதப்படுத்தும். ஒரு பிளவில் லிஃப்ட்/மாடிஃபைடு கரிடாகிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நான்கு வார காலத்தில் குணமடையலாம். பொதுவாக, வீக்கம் ஆறு நாட்கள் வரை நீடிக்கும், அதே நேரத்தில் புதிய திசு வளர்ச்சியானது இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும்.

    அறுவை சிகிச்சை அல்லாத இயற்கையான பைலோனிடல் நீர்க்கட்டி சிகிச்சையானது நீர்க்கட்டி சிறியதாக இருக்கும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மேலும், அறிகுறிகள் மிதமானதாகவும் அரிதான ஒன்றாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதி சரியான முறையில் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும், அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட தோலை மட்டும் உரித்து எடுக்கவும், சரியான முறையில் உட்காரவும், நீர்க்கட்டி மேலும் மோசமடையாமல் இருக்க ஒரு காக்சிக்ஸ் குஷனைப் பயன்படுத்தவும்.

    இதையும் படிக்கலாமே! - எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு (செபேசியஸ் சிஸ்ட்) - காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை

    முடிவுரை

    பைலோனிடல் நீர்க்கட்டிக்கான முன்கூட்டிய பரிசோதனைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. மேலும், நீர்க்கட்டி பொதுவாக அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, வடு திசு அல்லது சைனஸ் வளர்ச்சி ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் சீழ் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்றாகும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.