hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • கர்ப்ப காலத்தில் பிரா அணிவதால் சரும நமைச்சல் ஏற்படுவது ஏன்? I Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in Tamil? arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் பிரா அணிவதால் சரும நமைச்சல் ஏற்படுவது ஏன்? I Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in Tamil?

    Pregnancy

    கர்ப்ப காலத்தில் பிரா அணிவதால் சரும நமைச்சல் ஏற்படுவது ஏன்? I Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in Tamil?

    8 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்பத்தின் காரணமாக ஹார்மோன் மாற்றங்களோடு உங்கள் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். எடை அதிகரிப்பு, அயர்வு, தொடர் சோர்வு மற்றும் குமட்டல் ஆகியவை இதில் அடங்கும்.

    அதுமட்டுமல்லாமல், பிறப்புறுப்புப் பகுதியில் அல்லது மார்பகப் பகுதியில் நமைச்சல் ஏற்படலாம். உங்கள் மார்பகப் பகுதியில் நமைச்சல் இருந்தால், லேசாக பேடிங் செய்யப்பட்ட பிராவை உபயோகிப்பது பலன் தரும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உடலின் எதிர்பாராத பகுதிகளில் கூட நமைச்சல் தோன்றலாம்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நமைச்சலுக்கு பிராவும் ஒரு காரணமா? (Can You Experience Itching During Pregnancy Due To The Bra You Wear in Tamil)?

    சில நேரங்களில், கர்ப்பிணிப் பெண் பிராவின் காரணமாகக் கூட கடுமையான நமைச்சலை அனுபவிக்க நேரிடலாம். மார்பகங்களில் நமைச்சல் ஏற்பட, தோல் நீட்சி மற்றும் வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். மார்பகங்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதையும் காணமுடியும். சுமார் இரண்டு கப் அளவு வித்தியாசத்தைக் கண்டால், லேசாகபேடிங் செய்யப்பட்ட நர்சிங் பிராவை உபயோகிப்பது நல்லது.

    மார்பகங்களில் கொழுப்பு படிவதால், பாலூட்டி சுரப்பிகளும் வளரும். குழந்தையின் வருகைக்கு உங்கள் உடல் தயாராகும்போது மார்பகங்களில் நமைச்சல் அல்லது கூருணர்வு கொண்ட காம்புகள் போன்ற சிக்கல்களை அனுபவிக்க நேரிடலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மார்பகக் காம்பு மட்டுமே அரிக்கும். கர்ப்ப காலத்தில், முழு மார்பக பகுதியும் நமைச்சலுக்கு ஆளானால், லேசாக பேடிங் செய்யப்பட்ட வயரற்ற நர்சிங் பிரா அதிக நன்மை பயக்கும்.

    ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக பொதுவாக தோல் நெகிழ்ச்சித்தன்மை பெறுகிறது. இதனால், உங்கள் சருமம் நீட்சி பெற்று உடலைச் சுற்றி நமைச்சல் ஏற்படக்கூடும். வயிறு, தொடைகள், கைகள் மற்றும் மார்பகங்கள் போன்ற கடுமையான நமைச்சலை அனுபவிக்கும் பொதுவான பகுதிகளில் சில ஆகும்.

    கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் மார்பக நமைச்சல் ஏற்படுமா? (Do All Women Experience Itchy Breasts During Pregnancy in Tamil)?

    எல்லோருக்கும் ஏற்படாது. ஆனால், கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் நமைச்சல் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில நேரங்களில், எதிர்பார்த்ததை விட மிகவும் எரிச்சல் தருவதாக இருந்தாலும், இது கர்ப்பத்தின் போது பொதுவான ஒன்று. நமைச்சல் அதிகம் இருந்தால், மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது. வது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம். மிகவும் வசதியான சிறந்த லேசாக பேடிங் செய்யப்பட்ட நர்சிங் பிராவை அணிவதும் பலன் தரும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நமைச்சல், உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ மிகவும் சவாலான ஒன்று என்றாலும் பிரசவத்திற்குப் பிறகு நமைச்சல் நீடிக்காது. உடல் நமைச்சல்களை போக்க சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றியும் நான்ர்கள் கவனம் கொள்ளலாம்.

    ஹார்மோன் அளவுகள் மாறிக்கொண்டே இருப்பதால், நமைச்சல் தவிர, உடலின் பல்வேறு பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் மார்க் இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். உண்மையில், ஸ்ட்ரெட்ச் மார்க் வயிறு, பிட்டம் அல்லது மேல் கைகளில் கூட தோன்றக்கூடும். உங்கள் மார்பகங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் இருந்தால், முழு கவரேஜ் லேசாகபேடிங் செய்யப்பட்ட பிராவைத் தேர்ந்தெடுப்பது உதவும்.

    நமைச்சல் நீங்க என்ன செய்யவேண்டும்? (What Can You Do To Relieve Itchiness in Tamil)?

    நமைச்சலுக்கான காரணங்களை அறிந்தது போல, எரிச்சலில் இருந்து விடுபடும் வழிகளையும் அறிவது மிகவும் பயனுள்ளது. சில வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பது நிச்சயமாக சருமத்தை சீராக்க உதவும். அதுமட்டுமல்லாமல், சருமத்துக்கு ஆறுதலாக எரிச்சலை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. சில சிகிச்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    1. ஈரப்பதம் (Moisturize)

    நீர் அதிகம் அருந்துங்கள். அதுமட்டுமல்லாமல், அதிக வறட்சி அல்லது நீட்சி உள்ள பகுதிகளை ஈரப்பதமாகப் பராமரியுங்கள். உங்கள் ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கமாக இருகும்போது, புறத்தோலில் செதில் போன்ற அமைப்பைக் காணலாம். அதிக திரவ பதார்த்தங்களைக் குடிப்பது நன்மை பயக்கும். தடிப்புகள் அல்லது எரிச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் எண்ணெய் அல்லது கிரீம் தடவவும்.

    2. காற்றோட்டமான உடையை அணியவும் (Wear Breathable Clothing)

    இறுக்கமான ஆடைகளை அணிவது தோலில் சொறி அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்அதனால் காற்றோட்டமான, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் துணிகளுக்கு மாறுவது நல்லது. மார்பகங்களில் நமைச்சல் இருந்தால் இருந்தால், அதைத் தணிக்க லேசாக பேடிங் செய்யப்பட்ட வயரற்ற பிராவை உபயோகிக்கலாம். இறுக்கமான ஆடை சருமத்தை சூடேற்றி, வீக்கத்துடன் கூடிய நமைச்சலுக்கு வழிவகுக்கும்.

    3. அரிப்பைப்போக்க மருத்துவத்தன்மை கொண்ட கிரீம் பயன்படுத்தவும் (Consider Using A Medicated Cream To Relieve Your Itchiness)

    தற்போது, உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய ஏராளமான ஓவர்-தி-கவுண்டர் கிரீம்கள் கிடைக்கின்றன. இந்த கிரீம்களைத் தவிர, எஷன்ஷியல் ஆயில் அல்லது களிம்பு உட்செலுத்தப்பட்ட காட்டன் பேட்களையும் பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில், வாய்வழி மருந்துகள் எடுப்பது குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் அதைத் தவிர்ப்பது அறிவுறுத்தப்படுகிறது.

    4. நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள் (Consume A Diet Rich In Fiber)

    சில நேரங்களில், உட்கொள்ளும் உணவு கூட சருமத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கலாம். எனவே, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ் பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரை அணுகவும்.

    முடிவுரை(Conclusion)

    நமைச்சல், குறிப்பாக கர்ப்ப காலத்தில், மிகவும் சங்கடமானதாக இருக்கக் கூடும். இருப்பினும், மார்பக நமைச்சல் நீண்ட காலம் நீடிக்காது என்பதால், இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு, நமைச்சல் பொதுவாக மறைந்துவிடும். பிறப்புக்குப் பிறகும் தொடர்ந்து நமைச்சல் ஏற்பட்டால், மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

    Tags;

    Why Itching during pregnancy using bra in Tamil, Relieve Itchiness usiing bra in Pregnancy in Tamil, Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in English

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Priya Baskar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    மகப்பேறு ப்ரா வாங்கும் போது என்ன வகையான துணிகள் மற்றும் ஸ்டைல்கள் பார்க்க வேண்டும் I What Kind Of Fabrics And Styles To Look For While Shopping For A Maternity Bra in Tamil

    Image related to Skin Changes

    Skin Changes

    உங்கள் சரும பராமரிப்பு முறையில் தேயிலை மர எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? I How to include tea tree in your face care regime in Tamil?

    Image related to Labour Pain

    Labour Pain

    கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு உதவும் உணவுகள் I Foods that Can Help Pregnant Women Go into Labor in Tamil

    Image related to Baby Boy

    Baby Boy

    கருப்பையில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு எப்போது பாலியல் உறுப்புகள் உருவாகும்? I When Do Sex Organs Develop In Your Baby In The Womb in Tamil?

    Image related to Conception

    Conception

    கருப்பையில் கருவூட்டல் செயல்முறைக்கு எவ்வளவு விந்து தேவைப்படும்? I How Much Sperm is Needed for an Intrauterine Insemination Procedure in Tamil?

    Image related to Low Amniotic Fluid

    Low Amniotic Fluid

    கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே பனிக்குட நீரை எவ்வாறு அதிகரிப்பது I How to increase amniotic fluid naturally during pregnancy in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.