Sex Life
22 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒருவேளை நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணினால், நீங்கள் கர்ப்பமாவதற்கு தேவையான எல்லாவற்றையும் நிச்சியம் செய்துவிட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். இந்த கட்டுரை அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான ஏரளாமான தகவலையும், பயனுள்ள குறிப்புகளையும் வழங்குகிறது. நீங்கள் குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கும் போது அதன் சாத்தியக்கூறுகளை அதிகரிக்க உதவும் சிறந்த உடலுறவு நிலைகள் உங்களுக்காக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெண்கள் ஓவுலேசன் அதாவது கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாட்களிலே அதிக கருவுறுத்திறனை கொண்டிருக்கின்றனர். இந்த நாட்களில் அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வது கருவுறும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. உங்கள் ஓவுலேசன் சுழற்சியைத் தொடர்ந்து கண்காணித்தல் அல்லது ஓவுலேசன் கிட் உபயோகித்தல் போன்றவை நீங்கள் சரியான நேரத்தில் உடலுறுவு வைத்துக்கொள்வதை கணிக்க உதவும்.
கர்ப்பமடைய முயற்சி செய்துக்கொண்டிருக்கும் தம்பதியினர் முடிந்தளவு அடிக்கடி உடலுறுவு வைத்துக்கொள்வது வெற்றிகரமாக கருத்தரிக்க உதவும். ஆனால், இது நீங்கள் அன்றாடம் முடிக்க வேண்டிய ஒரு வேலை என எண்ணி செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தம்பதியினர் இருவரும் இந்த உடலுறுவு செயல்முறையில் திருப்தியாக முழுமனதுடன் ஈடுபடுதல் அவசியம். இந்த உடலுறுவு என்பது நாம் சாப்பிடுவது, தூங்குவது போன்ற சாதாரண அன்றாட கடமைகளில் ஒன்றாக இருந்தால், நீங்கள் அதில் இருக்கும் ஆர்வத்தை இழந்துவிடுவீர்கள், அதுமட்டுமின்றி அது உங்களுக்கும் வாழ்க்கைத்துணைக்கும் இடையிலான உறவிலும் விரிசலை ஏற்படுத்தலாம்.
உங்கள் பாலியல் வாழ்க்கையை திருப்திகரமானதாக்க நீங்கள் முயன்று பார்க்க வேண்டிய பல வழிகள் இருக்கின்றன. நீங்கள் பல்வேறு உடலுறுவு நிலைகள், ரோல்-பிளே, ஃபோர் பிளே, டாய்ஸ், லூப்ஸ், காஸ்பிளே போன்றவற்றை முயன்று பார்க்கலாம். இவ்வளவு ஏன் நீங்கள் எப்போதும் உறவு கொள்ளும் இடம் அல்லது தரை போன்றவற்றை மாற்றுவதன் மூலமும் உங்கள் உடலுறவு திருப்திகரமானதாக அமையலாம்.
குழந்தை கருத்தரிக்க முயற்சிக்கும் போது தம்பதியினர் இருவரும் உடலுறவை அனுபவிக்க, வெவ்வேறு விதமான உடலுறவு நிலைகளை முயற்சிக்கலாம். வெற்றிகரமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் 6 சிறந்த உடலுறவு நிலைகள் பின்வருமாறு:
ஆம்! வெற்றிவாய்ப்புகள் நிறைந்த தொன்று தொட்டு வரும் உடலுறவு முறை. ஒரு பெண் கீழே அவளது முதுபுறம் கீழ் படும் படி படுத்து அவளது மேல் ஆண் புணர்ச்சியில் ஈடுபடும் நிலை, இது ஆழமான ஊடுருவலை ஏற்படுத்தும். ஆழமான ஊடுருவல் என்றால் விந்துக்கள் கருப்பைவாயின் மிக அருகில் வெளிப்படும், இது கருத்தரித்தல் வாய்ப்பினை அதிகரிக்கிறது. இந்த உடலுறுவு நிலை மிக சிறந்தது மட்டுமல்ல, மிக எளிமையானது. மேலும், இது பெண்களை விரைவாக திருப்தியடைய செய்கிறது. மேலும் இம்முறையில் பெண்ணின் இடுப்பின் கீழ் தலையணை வைத்து புணர்ச்சியில் ஈடுபடுவது கருத்தரித்தலுக்கு நற்பயனாக அமையும்.
இது ஆண்களால் அதிகம் விரும்பப்படும் சிறந்த உடலுறவு நிலை. இந்நிலையில் பெண் நான்கு கால்களில் குனிந்து இருக்கும் போது ஆண் பின்புறத்தில் இருந்து புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். இதற்கு ஆண்கள் அதிக சிரமப்பட வேண்டியதில்லை, இம்முறையை சரியாக பின்பற்றினால் தம்பதி இருவருக்கும் அலாதி இன்பம் கிட்டும். இந்த உடலுறுவு நிலையில் பெண்ணின் கருப்பைவாய் நன்றாக விரிந்து திறக்கப்படுவதால் அது விந்தணுக்கள் மிக எளிதாக கருமுட்டையை அடைய வழிவகுக்கிறது.
பெண்களுக்கான வீரியமிகுந்த உடலுறவு நிலைகளில் ஒன்று ரிவர்ஸ் கௌகேர்ள் என்று கூறலாம். ஏனெனில், இம்முறையில் முழு ஆதிக்கம் பெண்களை சார்ந்தது. அதாவது, இந்நிலையில் ஆண்கள் கீழும் பெண்கள் மேலும் இருப்பது மட்டுமின்றி, ஒருவரது ஒருவர் முகத்தை பார்க்காமல், எதிர்பக்கம் பார்த்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். பெண்கள் அவர்களது செளகரியத்திற்கு ஏற்றாற்போல நகர்வுகள் மற்றும் உந்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் மூலம் ஆழமான ஊடுருவல் ஏற்படுவதையும், விந்தணுக்கள் எளிதாக பெண்ணருப்பின் உள்ளே செல்வதையும் அவர்களால் உணர முடியும்.
இந்நிலையில், பெண் அவளது இணையின் தோள்களில் இரண்டு கால்களையும் வைத்து படுத்துக்கொள்ளவேண்டும். ஆண் பெண்ணின் இரண்டு கால்களை பிடித்த வண்ணம் புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது விசைஈர்ப்பு என்பது மிக முக்கியமான காரணியாகும். இந்நிலையில் பெண்ணின் இடுப்புப்பகுதி சிறிது உயரந்த நிலையில் இருக்கிறது, எனவே விசைஈர்ப்பின் காரணத்தினால் விந்தணுவை நேரடியாக கருப்பைவாயை நோக்கி செல்ல வழிவகுத்து கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
சைடு பை சைடு சிஸ்ஸர்ஸ் உடலுறவு முறை: இந்த உடலுறவு முறையில், தம்பதியினர் இருவரும் ஒருபுறம் சாய்வாக படுத்து, நேருக்கு நேர் பார்த்தபடி அவர்களது கால்கள் இரண்டும் பிணைந்து எளிமையான ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது. இந்நிலை பெண்குறி காம்பில் அதிக தூண்டுதலை ஏற்படுத்தி அவர்கள் விந்தணுக்களை பெற தயார் செய்கிறது. இம்முறை ஆழமான ஊடுருவலிற்கு உதவுவதால், கருத்தரித்தலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த உடலுறுவு நிலை உங்கள் பாலியல் வாழ்க்கையை நிச்சயமாக ஆர்வமிக்க ஒன்றாக மாற்றக்கூடியது. ஆண் நின்று கொண்டும், பெண் தனது கைகளையும் கால்களையும் உயர்த்தி தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். பின், ஆண் தனது இணையின் இரண்டு கால்களையும் பின்னாலிருந்து பிடித்து உயர்த்திக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபடு வேண்டும். இது எளிமையாக கருத்தரிக்க தேவையான ஆழமான ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது.
உடலுறுவு கொள்வதற்கு முன் மற்றும் அதில் ஈடுபடும் போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதும் மிகவும் அவசியம். இம்முறை நாம் கருத்தரிப்போமா அல்லது மாட்டோமா என்று கவலைப்படுவது இந்த செயல்முறையை பாதிக்கும். மாறாக, நீங்கள் எந்தவித கவலையுமின்றி ஆத்மார்த்தமாக புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் ரொமாண்டிக் படங்களை பார்க்கலாம், இரவு உடலுறவு கொள்வதற்கான மனநிலையை அமைக்க, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் வெளியே டின்னர் சாப்பிட போகலாம். உங்கள் துணையுடன் நீங்கள் கொள்ளும் அதீத, காதல் உணர்வானது, நீங்கள் உங்கள் உடலுறவு வாழ்க்கையில் அதிக இன்பத்தை அனுபவிக்கக் காரணமாக அமையும்.
ஒவ்வொருவரின் உடலும் வித்தியசமானது, மேலும் பாலியல் ரீதியாக தூண்டும் வெவ்வேறு இன்பப் புள்ளிகளை கொண்டிருப்பார்கள். உங்கள் துணையை பாலியல் ரீதியாக தூண்டும் வெவ்வேறு இன்பப் புள்ளிகளை தெரிந்துக்கொள்வது உடலுறவிற்கு ஏற்ற மனநிலையை ஏற்படுத்தும்.
இருவரிடமும் இருக்கும் புரிதலும் குழந்தை கருத்தரித்தலுக்கான செயல்முறைக்கு உங்களை தயார்படுத்தும். உங்கள் துணைக்கு நீங்கள் உடலுறவின் போது எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் அல்லது அவர்களை வெவ்வேறு உடலுறவு நிலைகளை முயற்சிக்க ஊக்குவிப்பதன் மூலமும் புணர்ச்சியில் ஈடுபடும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும்.
உடலுறவிற்கான சிறந்த நிலைகளில் ஒன்றை முயற்சித்தபிறகு, நீங்கள் படுத்த நிலையிலேயே 10-15 நிமிடங்களுக்கு இருத்தல் வேண்டும். சிறப்பு பயனிற்கு, இடுப்பு பகுதியின் கீழ் தலையணை வைத்துக்கொள்வது நல்லது. இது விந்தணுக்கள் கருமுட்டையை விரைவாக அடைய உதவும்.
உடலுறவிற்குப் பிறகு பெண் உறுப்பை சுத்தம் செய்தல் எஸ்டிடி-க்களைத் தவிர்க்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது, பெண் உறுப்பை உடலுறவு கொண்டு ஒருமணிநேரம் கழித்தோ அல்லது உடலுறவு செய்து சிறிது நேரம் கழித்தோ சுத்தம் செய்யவும்.
இதுமட்டுமின்றி, ஒருவர் ஆரோக்கியமாக இருத்தலும் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இந்த உலகத்திற்கு குழந்தையை கூட்டி வரப்போகிறீர்கள், உங்கள் மரபியல் குணங்கள் உங்கள் குழந்தைக்குப் போகும். நீங்கள் விரைவாக கருத்தரிக்க சில ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகள் பின்வருமாறு:
மது மற்றும் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்
காபி அருந்துவதை குறைப்பது சிறந்தது
ஆரோக்கியமான சமநிலை உணவுவகைகளை உட்கொள்வது நல்லது
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருத்தல்
உண்மையாக சொல்லவேண்டுமெனில், நீங்கள் குழந்தை வேண்டுமென்று முடிவு செய்தவுடன் நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திப்பது சிறந்தது. இது என்ன நடக்கப்போகிறது என்பதற்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவுவது மட்டுமின்றி கர்ப்பகாலத்தில் உங்கள் உடல் எப்படி மாறும் என்பதையும் தெரிந்துக்கொள்ள உதவும்.
நீங்கள் மருத்துவர் உதவியை நாட வயதும் ஒரு முக்கிய காரணமாகும். வயதாக ஆக உங்கள் கருத்தரிக்கும் திறன் குறையும். நீங்கள் 35 வயதுடையவராகவும், கடந்த 6 மாதமாக குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்றாலும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், பிசிஓஎஸ்/பிசிஓடி, அல்லது ஹார்மோனல் சமநிலையின்மை போன்றவை இருப்பின், உங்கள் மருத்துவர் நீங்கள் கருத்தரிக்க சில மருந்துகளை பரிந்துரைக்கலாம். மருத்துவர் உங்கள் நிலையை பொறுத்து உங்களை எடையிலக்கவோ அல்லது எடை ஏற்றவோ பரிந்துரைக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு ஆண்மைக்குறைபாடு அல்லது மலட்டுத்தன்மை இருப்பின், அது உங்கள் வாழ்வின் பெருந்துயரமாக இருக்கும். ஆனால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நீங்கள் எப்போது உங்கள் துணையின் ஆதரவை நாடலாம்.
இதையும் படிக்கலாமே! - தாமதமாக கருத்தரித்தல் காரணங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டியவை
கருத்தரித்தலுக்கான காலவரையறை மற்றும் வெற்றிகரமாக கருத்தரித்தல் இரண்டும் ஒவ்வொருவரை பொறுத்தும் வேறுபாடும். முதல் முயற்சியிலேயே ஒருவர் கருத்தரிக்கலாம், ஒருசிலருக்கு 12 மாதத்திற்க்கு மேலும் ஆகலாம். தொடர்ந்து முயற்சிப்பது மற்றும் புணர்ச்சியில் ஆத்மார்த்தமாக ஈடுபடுதலே உடலுறவு. கருத்தரிக்க சிறந்த உடலுறவு நிலைகளை ஏன் நீங்கள் இனி முயற்சிக்கக் கூடாது?
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது பின்வருவனவற்றில் மீது கவனம் கொள்ளவும்
பிறந்ததிலிருந்து 12 மாதங்கள் வரை குழந்தையை மகிழ்வுடன் வைத்துக் கொள்வது எப்படி?
குழந்தைகள் எப்போது கண்ணோடு கண் பார்க்கிறார்கள்?(When do infants make eye contact in Tamil)
கர்ப்பமாக இருக்கும் போது முள்ளங்கி சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Poppy Seeds During Pregnancy: Meaning, Benefits & risks in Tamil
உங்கள் குழந்தையை எப்போது மசாஜ் செய்ய வேண்டும்- குளிக்க வைக்கும் முன்பா அல்லது பின்பா? (When should you massage your baby- before bath or after a bath in Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |