hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் எவ்வாறு உணர்கிறார்கள்? arrow

In this Article

    கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் எவ்வாறு உணர்கிறார்கள்?

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் எவ்வாறு உணர்கிறார்கள்?

    13 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் கர்ப்பிணி எப்படி உணர்கிறார்?

    • உங்கள் வழக்கமான மாதவிடாய் தவறியிருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கக் கூடும். நீங்கள் கர்ப்பமான ஒரு மாதத்திற்குப் பிறகு, கர்ப்ப பரிசோதனைக் கருவி மூலம் நீங்கள் கர்ப்பமாகி இருப்பதை வீட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உண்மையில், அந்த பரிசோதனை கருவியில் ஒரு பாசிட்டிவ் பாயிண்ட் காண்பிக்கும். அது கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் உற்பத்தி செய்யும் எச்சிஜி அளவைக் குறிக்கிறது. கருத்தரித்த பத்து நாட்களுக்குப் பிறகு எச்சிஜி(HCG) அளவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

    • உண்மையில், இந்த கட்டம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான காலம். உண்மையில், கர்ப்பம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதனால், இந்த காலகட்டத்தில் நீங்கள் பல சூழ்நிலைகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளைகூட சமாளிக்க முடியும். பல கர்ப்பிணிகள் பொதுவாக கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் அசாதாரண வெளியேற்றத்தைக் காணலாம்.

    • ஒரு 4 வார கர்ப்பகால வெளியேற்றம் பொதுவாக இயல்பானது மற்றும் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. இருப்பினும், அது ஒரு துர்நாற்றத்துடனும் அல்லது அதனுடன் தொடர்புடைய அரிப்பு இருந்தால், உங்கள் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும். இதனால், உங்கள் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பல ஹெல்த் நிலைகளைத் தடுக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில அறிகுறிகள் யாவை?

    எல்லா தாய்மார்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை சந்திப்பதில்லை. உண்மையில், உங்கள் முதல் கர்ப்ப அனுபவம் உங்கள் இரண்டாவது கர்ப்ப அனுபவத்துடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கலாம். கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் நான்கு வாரங்களில் பொதுவாக அனுபவிக்கும் சில பொதுவான அறிகுறிகள் உங்கள் வசதிக்காக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    சில பொதுவான அறிகுறிகள்

    உப்புசம்

    உங்கள் குழந்தை வளர்ச்சியடைய உடல் அதிக இடத்தை உருவாக்குவதால், உங்கள் அடிவயிற்றின் கீழ் பகுதியில் உப்புசம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, உங்கள் கருப்பையின் புறணியும் தடிமனாக மாறி, குழந்தையைப் பெறுவதற்குத் தயாராகிறது.

    ஸ்பாட்டிங்

    உங்கள் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில், உங்களுக்கு லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம். அத்துடன் 4 வார கர்ப்ப வெளியேற்றத்தை அனுபவிக்கக் கூடும் . இரத்தப்போக்கு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இரத்தப்போக்கு நீண்ட காலத்திற்கு நீடித்தால், உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

    அலைபாயும் மனம்

    இந்த அறிகுறிகள் பொதுவாக உங்கள் கர்ப்பத்தின் முதல் மாதத்தில் மிகவும் பொதுவானவை. உண்மையில், மனநிலை மாற்றங்கள் பொதுவாக உங்கள் ஹார்மோன் அளவில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏற்படுகிறது. இறுதியில் எதிர்பாராத உணர்ச்சி மாற்றங்களுக்கு அது வழிவகுக்கும். உங்கள் கர்ப்பத்தின் முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில், மனநிலை மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். சில நிதானமான பயிற்சிகள், யோகா போன்றவை மனநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    மென்மையான மார்பகங்கள்

    உங்கள் கர்ப்பத்தின் முதல் மாதத்தில் பால் சுரப்பிகள் உருவாகி வருவதால், நீங்கள் மார்பகங்களில் மென்மைத் தன்மையை அனுபவிக்கலாம். அதுமட்டுமல்லாமல், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஊட்டமளிக்கும் வகையில் உங்கள் மார்பக அளவும் அதிகரிக்கிறது.

    சோர்வு

    உங்கள் உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், நீங்கள் சோர்வு அல்லது லேசான தலைவலியை அனுபவிக்கலாம். நீங்கள் வைட்டமின் குறைபாடுகளுக்கும் ஆளாகலாம். நன்கு சரிவிகித உணவு மற்றும் சரியான தூக்கம் இந்தப் பிரச்சனைகளை பெருமளவு குறைக்க உதவும்.

    பிறப்புறுப்பு வழி வெளியேற்றம்

    உங்கள் கர்ப்பத்தின் நான்கு வாரங்களில் நீங்கள் பிறப்புறுப்பு வழி வெளியேற்றத்தை அனுபவிக்கக் கூடும். உண்மையில், வெளியேற்றம் வெள்ளைப்படுதலாகவும், தெளிவான ஒளி நிறமாகவும் இருக்கலாம். இது பொதுவாக சாதாரணமாக கருதப்படுகிறது. இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் புண் அல்லது வலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

    நீங்கள் கர்ப்பமான முதல் மாதத்தில் என்ன செய்ய வேண்டும்?

    • கர்ப்பத்தின் முதல் மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்த அம்சங்களில் சிலவற்றைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கர்ப்ப காலத்தை மறக்க முடியாததாக மாற்றலாம். இந்த அம்சங்களில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. '

    • நீங்கள் புதிய டயட்டைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யுங்க. இரத்த சோகை உட்பட பல ஹெல்த் கன்டிஷனைத் தடுக்க நீங்கள் கீரை மற்றும் சீஸ் உடன் உணவைத் தொடங்கலாம்.

    • உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், நீங்கள் மது மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற பழக்கங்களைத் தொடர்வது குழந்தையின் பிறவி குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.

    • புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பதையும் தவிர்த்துடுங்க.

    • முடிந்தவரை ஓய்வெடுங்க. இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

    • எளிமையான உடற்பயிற்சிகளை பண்ணுங்க. நீங்க மருத்துவரைத் தொடர்புகொண்டு உங்கள் உடலுக்கும் உங்கள் கர்ப்பகால மாதத்திற்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். வழக்கமாக எளிதான உடற்பயிற்சியுடன் தொடங்குவதும், இறுதியில் மிகவும் நெகிழ்வான பயிற்சிகளை செய்வதும் நல்லது. நடைபயிற்சி மற்றும் ஸ்டிரெச்சிங் போன்ற பல பயிற்சிகள் குறிப்பாக பிரசவத்தின் போது செய்வது பெரும் உதவியாக இருக்கும்.

    • ஒவ்வொரு நாளும் நீங்கள் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க.

    • கர்ப்பம் தொடர்பான அம்சங்களை ஆய்வு செய்ய தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்க. மேலும் நீங்கள் டெலிவரிக்கு தயாராவதற்கு சில கர்ப்பம் தொடர்பான இதழ்களையும் படிக்கலாம்.

    • உங்க குழந்தையின் முதல் உதை அல்லது படபடக்கும் அசைவுகள் போன்ற சிறப்புத் தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் காலெண்டரில் தேதிகளைக் குறித்து வையுங்க.

    • உங்க கர்ப்பத்துடன் தொடர்புடைய புகைப்பட புத்தகத்தை உருவாக்குவது நீங்க நினைப்பதை விட மிகவும் வேடிக்கையாக இருக்கும். நீங்களே ஒரு புத்தகத்தை வாங்கி உங்க கர்ப்ப காலத்தில் நீங்க எடுத்த புகைப்படங்களை அதில் ஒட்டலாம். உங்கள் குழந்தை உதைக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு மிகவும் சுவாரயஸ்மான அனுபவத்தை கொடுக்கும்.

    உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

    • நீங்கள் உங்கள் மருத்துவரைச் சந்திக்கும்போது, சில கேள்விகளைக் கேட்பதுடன், அனைத்து விளக்கங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்க குடும்பத்தின் மருத்துவ வரலாறு அல்லது பழக்க வழக்கங்களைப் பொறுத்து நீங்க எடுக்க வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேளுங்க.

    • நீங்க ஏற்கனவே மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அந்த மருந்தின் பாதுகாப்பு பற்றி நீங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும். உங்கள் மருத்துவர் அந்த மருந்தைத் தொடரவும் அல்லது நிறுத்தவும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. உங்க அடுத்த மருத்துவ பரிசோதனைகளின் அட்டவணை குறித்தும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

    இதையும் படிக்கலாமே! - உங்கள் முதல் மும்மாதங்களுக்கான லைஃப் சேவர்கள் (உயிர் காக்கும் ஆலோசனைகள்)

    கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் உங்கள் சரிபார்ப்புப் பட்டியலில் என்ன சேர்க்க வேண்டும்

    உங்கள் நான்காவது வாரத்தில், உங்கள் எதிர்கால அப்பாயின்ட்மென்ட்கள் மற்றும் சோதனைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேச முயற்சி செய்யுங்க. உறுதிப்படுத்தலின் கீழ், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தகவலைப் பகிரலாம். உங்கள் சரிபார்ப்புப் பட்டியலில் உங்கள் உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் செயல்படுத்தும் செயல்முறை ஆகியவையும் இருக்க வேண்டும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.