Lowest price this festive season! Code: FIRST10
Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
அத்திப் பழங்கள் மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றாகும். அத்திப் பழங்களின் அருமையான சுவையின் பொருட்டு மட்டுமே அவை பயிரிடப்படுவதில்லை, அவற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளுக்காகவும் தான் விளைவிக்கப்படுகின்றன. அத்திப் பழம் என்பது ஒரு பூ ஆகும், இது உண்மையில் பழமல்ல. பழுத்த அத்திப் பழம் என்பது முழுமையாக மலர்ந்த மலராகும், நன்கு பழுத்த பழத்தின் அடையாளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். உலர்ந்த அத்திப் பழங்களை பல வருடங்களுக்கு பதப்படுத்தி வைக்கலாம். அத்திப் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை மலச்சிக்கலை தீர்ப்பதற்கும், உடல் எடை குறைப்பதற்கும், கண் நலனை பேணுவதற்கும், இரவில் நல்ல தூக்கம் வருவதற்கும், மூல வியாதியை குணப்படுத்துவதற்கும், கல்லீரலின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. மேலும், இது சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகவும் விளங்குகிறது. தவிர, இரத்த சோகை உள்ளவர்களுக்கு பயனளிப்பதாகவும், உங்களுக்கு மிருதுவான சருமத்தை நல்குவதாகவும், சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துவதாகவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதாகவும் விளங்குகிறது. அது மட்டுமின்றி, இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் ஆக்குகிறது.
கர்ப்ப காலத்தில் அளவுக்கு மீறி அத்திப் பழங்களை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் கூட ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்கள் எவ்வாறு பயனளிக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து வாசிக்கவும்.
கர்ப்ப காலத்தில் அத்திப் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் கூட, அளவுக்கு மீறி சாப்பிடும் எது ஒன்றும் கெடுதல் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், சரியான அளவில் மட்டுமே பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை கர்ப்ப காலத்தின் போது, நீங்கள் அத்திப் பழம் சாப்பிடுவதற்கு மிகுந்த நாட்டம் கொண்டிருந்தால், தேவைக்கு விஞ்சிய அளவு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
அத்திப் பழங்களில் கால்சியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அவை அபரிமிதமான அளவு இயற்கையான இரும்புச் சத்தினை கொண்டுள்ளன. இந்த நுண்ணூட்டச் சத்துகள் தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கும், அறிவுத் திறத்தை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன. குறிப்பாக கர்ப்ப காலத்தில், அத்திப் பழங்களை உண்பதால் ஆரோக்கியமான, அறிவுக் கூர்மையுடைய குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அத்திப் பழங்களில் ஏ, கே, ஈ, டி மற்றும் பி போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அத்திப் பழங்கள் முதிர்கருவினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், எலும்பு நலன், இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் மூளை நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. பச்சையான அத்திப் பழமோ அல்லது உலர்ந்த பழமோ, ஒரே அளவிலான ஊட்டச் சத்தினை அத்திப் பழம் அளிக்கிறது. ஆகவே, உலர்ந்த அத்திப் பழங்களையும் கூட தயங்காமல் சாப்பிடவும்.
கர்ப்ப காலத்தின் போது தாயையும், முதிர்கருவினையும் பாதிக்கக் கூடிய இரத்த சோகையை அத்திப் பழங்களை உண்பதன் மூலம் எதிர்கொள்ள முடியும்.
அத்திப் பழங்கள் மலச்சிக்கலை சரி செய்யக் கூடிய இயற்கையான நார்ச்சத்தினை கொண்டுள்ளது, எனவே தொல்லையின்றி மலம் கழிப்பதற்கு உதவியாய் இருக்கிறது. அத்திப் பழங்களில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், கர்ப்ப காலத்தின் போது உயரக் கூடிய வாய்ப்புள்ள குளூக்கோஸ் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். கர்ப்ப காலத்தில் அத்தி பழம் உண்பது சர்க்கரை உண்ணும் அளவுக்கதிகமான நாட்டத்தையும் கூட கட்டுப்படுத்த உதவும். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம், எனவே எப்போதெல்லாம் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் உண்ணலாம். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை உண்பது மசக்கையையும் கூட போக்குவதாக கூறப்படுகிறது.
தேன் போன்று தித்திக்கும் சுவையுடைய அத்திப் பழங்கள் மனதிற்கும், நாவிற்கும் சுவையூட்டி, ஆசுவாசப்படுத்தும்.
அத்திப் பழங்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், சிலர் தவறுதலாக அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடக் கூடும். இதனால் பக்க விளைவுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாப்பிட வேண்டிய சரியான அளவு என்ன என்பதை தெரிந்து கொள்வதும், உடல் எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியமானது.
வயிற்றுப் போக்கு
மிகக் குறைவான இரத்த சர்க்கரை அளவு
இரத்த அழுத்தம் குறைவது
சிலருக்கு மகரந்த ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், இதனை சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடலாம்
புதிதாக விளைந்த அத்திப் பழங்கள் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கப் பெறுகின்றன. புதிதாக விளைந்த அத்திப் பழங்களை அதன் மிருதுவான, வெற்று தோலை பார்த்து கண்டு பிடிக்கலாம். சிறிது புளிப்பான அல்லது கெட்டுப் போன அத்திப் பழங்கள் விரைவில் அழுகிப் போய் விடும். முழுமையாக பழுத்த அத்திப் பழம் முழுதாக பூத்தது போல் இருக்கும். அத்திப் பழங்களின் வாய்ப்பகுதி பச்சை நிறத்தில் தொடங்கி, பழத்தின் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் முடிவடைகிறது.
பழங்களின் புத்துணர்ச்சியை தக்க வைப்பதற்கு, அவற்றை குளிர்சாதன பெட்டியில் குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.
குளிர்பான பெட்டியில் வைக்கும் போது, அதனை டப்பாவில் மூடி வைப்பதை தவிர்க்கவும், அதற்கு பதிலாக டப்பாவில் திறந்தவாறு வைக்க வேண்டும்.
குளிர்பான பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டிருக்கும் அத்தி பழங்கள், 6 முதல் 7 நாட்களுக்கு மட்டும் தான் புத்துணர்ச்சியுடன் இருக்கும், எனவே அதற்கேற்றவாறு அதனை பயன்படுத்தவும்.
நீங்கள் வீட்டிலேயே பழங்களை உலர வைக்கலாம் அல்லது கடையிலிருந்து நேரடியாக உலர்ந்த அத்திப் பழங்களை வாங்கி வரலாம். உலர்ந்த அத்திப் பழங்களை ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்து விட்டால், அழுகிப் போகாமல் வருடம் முழுவதும் புதிதாக, சாப்பிடத் தகுந்ததாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள்
மாதுளை மற்றும் ஆரஞ்சு பழங்களுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது அத்திப் பழங்கள் இன்னும் சுவையாக இருக்கும். அத்திப் பழங்களை சாலட்களில் ஆலிவ் எண்ணெய், தேன், எலுமிச்சை மற்றும் உப்புடன் கலந்து உண்ணலாம்.
காலை உணவிற்கான தானிய வகைகளுடன் அத்திப் பழங்களை பச்சையாகவோ அல்லது உலர் அத்திப் பழங்களையோ சேர்த்து சாப்பிடலாம்.
மிதமான சூட்டில் உள்ள பாலில் உலர்ந்த அத்திப் பழங்களை கலந்து, கூடுதல் சுவையூட்டுவதற்கு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பருகலாம்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |