hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?(How To Check Pulse Rate During Pregnancy In Tamil) arrow

In this Article

     கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?(How To Check Pulse Rate During Pregnancy In Tamil)

    Pregnancy Journey

    கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?(How To Check Pulse Rate During Pregnancy In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    முன்னுரை (Introduction)

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது அழகான அத்தியாயம் ஆகும். அடுத்து புதிய தாய்மாராக வர இருப்பவர்களின் ஒரு உடலில் இரண்டு உயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் அவர்களது மனம் மற்றும் உடலில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு இதய செயல்பாட்டில் மாற்றம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த மாற்றங்களுடன் இணைந்து மன ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

    கர்ப்பம் மற்றும் இதய செயல்பாடு (Pregnancy and cardiac function)

    ஒரு பெண் கர்ப்பமாக இருக்கையில், அவரது இதய துடிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இதய துடிப்பு, இதய ஓட்டம், ரத்த அளவுகள் போன்றவற்றில் மாற்றம் உண்டாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், கர்ப்பப்பையில் குழந்தை வளரும் நிலையில், அதை நோக்கி அதிகமான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பத்திற்கு முந்தைய உங்களின் ரத்த ஓட்டத்தில் 5இல் ஒரு பங்கு கர்ப்ப காலத்தில் உங்கள் கர்ப்பப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும்.

    கர்ப்பம் அல்லாத பெண் ஒருவரின் இதயத் துடிப்பு அல்லது நாடித் துடிப்பு என்பது நிமிடத்திற்கு 60 முதல் 100 என்ற வகையில் இருக்கும். எனினும், சராசரியாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 என்ற அளவில் கூடுதலாக இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாற்றங்கள் கர்ப்ப காலத்தின் முதலாவது அத்தியாய காலத்தில் உண்டாகும் மற்றும் கர்ப்ப காலம் முழுமைக்கும் நீடிக்கும். இதயத்தில் இருந்து மொத்தம் எவ்வளவு ரத்தம் பம்ப் செய்யப்படுகிறதோ அது கார்டியாக் அவுட்புட் என்று குறிப்பிடப்படும். இது 30 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் கார்டிக் அவுட்புட் அளவு படிப்படியாக குறைய தொடங்கும்.

    எனினும், பிரசவத்தின்போது கார்டியாக் அவுட்புட் மேற்கொண்டு 30 சதவீதம் அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கார்டியாக் அவுட்புட் முதலில் வெகுவாக சரியும். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக குறையும். தோராயமாக பிரசவத்தில் இருந்து 6 வாரங்கள் கழித்து கார்டியாக் அவுட்புட் என்பது கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலையை அடையும்.

    கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?(How to check pulse during pregnancy In Tamil)

    ஒரு கண்காணிப்பு கருவியின் துணையின்றி நாடித்துடிப்பை நீங்கள் சொந்தமாக பரிசோதனை செய்து கொள்வதற்கு 4 வழிமுறைகள் உள்ளன. அந்த 4 முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

    ரேடியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை(The radial pulse method):

    ரேடியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது உங்களின் ரேடியல் குழாய்கள் வழியாக பம்ப் செய்யப்படும் ரத்த ஓட்டத்தை உணருவதாகும். இது உங்கள் கை மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. இது எளிமையான வழிமுறை ஆகும்.

    • முதலில் ரேடியல் குழாய் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். ஒரு கைக்கு எதிர் திசையில் உள்ள மற்றொரு கையின் மணிக்கட்டு பகுதியில் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் கொண்டு தடவி பார்ப்பதன் மூலமாக இதனை கண்டறியலாம்.

    • இரண்டாவதாக, நாடித்துடிப்பை கட்டை விரல் கொண்டு பரிசோதனை செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கட்டை விரல்களில் உள்ள ரத்தக் குழாய்களின் காரணமாக நாடித்துடிப்பை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படும்.

    • நாடித்துடிப்பை உணரத் தொடங்கியவுடன் 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு வருகிறது என்பதை எண்ணிக் கொள்ளவும்.

    • உங்கள் இதயத் துடிப்பை கணக்கீடு செய்ய இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு, உங்கள் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 80 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது என்றால் 15 நொடிகளுக்கு 20 என்ற வகையில் இருக்கும்.

    இதையும் படிக்கலாமே! - உப்பைக் கொண்டு வீட்டிலேயே கர்ப்பத்தைச் சோதிப்பது எப்படி?(How To Check Pregnancy At Home With Salt? In Tamil)

    கரோடிட் நாடித்துடிப்பு பரிசோதனை முறை(The carotid pulse method):

    கரோடிட் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள கரோடிட் குழாய் வழியாக பம்ப் செய்யப்படும் ரத்த ஓட்டத்தை உணருவதன் மூலமாக கணக்கிடும் முறையாகும். உங்கள் கழுத்துப் பகுதியில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி என்பதை இது விவரிக்கிறது.

    • எப்போதும் போல, முதலில் சரியான குழாயை கண்டறிய வேண்டும். உங்கள் மூச்சுக்குழாய்க்கு பக்கவாட்டில் தாடை எலும்பு பகுதிக்கு கீழே உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை வைத்து தடவிப் பார்க்கவும். உங்கள் இதயத் துடிப்பை தெளிவாக உணரும் வரையில் நீங்கள் விரல்களை நகர்த்திப் பார்க்க வேண்டும்.

    • 15 நொடிகளுக்கு நீங்கள் உணரும் நாடித்துடிப்பை எண்ணிக் கொள்ளவும்.

    • உங்கள் இதயத்துடிப்பை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும்.

    பெடல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை(The pedal pulse method):

    பெடல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது நம் கால் பாதத்தின் மேல் பகுதியில் பரிசோதனை செய்யும் முறையாகும்.

    • அமர்ந்த நிலையில் உங்களால் இந்தப் பரிசோதனையை செய்ய முடியாது என்று நினைத்தால் முதலில் முதுகை கீழே வைத்து படுத்துக் கொள்ளவும்.

    • உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை உங்கள் பாதத்தை நோக்கிச் செல்லும் எலும்புக்கு கீழே வைத்துக் கொள்ளவும். எலும்பை சுற்றியிலும் அல்லது இரண்டு பக்கமும் உங்கள் விரல்களை நகர்த்துவதன் மூலமாக நீங்கள் நாடித்துடிப்பை உணரலாம்.

    • நாடித்துடிப்பை கண்டறிந்த பிறகு, 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு என்பதை கணக்கீடு செய்யவும்.

    • இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும்.

    பிரேச்சியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை(The Brachial pulse method):

    • உங்கள் வெளிப்புற கை மேல் நோக்கியும், உள்புற கை லேசாக மடங்கிய வகையிலும் இருக்குமாறு உங்கள் கையை திருப்பவும்.

    • உங்கள் மூட்டுப்பகுதிக்கு மேலே உள்ள வளைவுகளுக்கு இடையே மற்றும் உங்கள் மூட்டுப்பகுதிக்கு கீழே உள்ள எலும்பு பகுதி ஆகிய இடங்களில் உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை வைக்கவும். இப்போது உங்கள் கையை ஒரு இன்ச் உயரத்திற்கு தூக்கியபடி விரல்களை நகர்த்தவும். நாடித்துடிப்பை உணருவதற்கு நீங்கள் கடினமாக அழுத்த வேண்டியிருக்கலாம்.

    • நாடித்துடிப்பை உணர்ந்தவுடன் 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு வருகிறது என்பதை கணக்கீடு செய்யவும்.

    • இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கவும்.

    முடிவுரை (Conclusion)

    உங்கள் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 வரையில் கூடுதலாக இருக்கும் என்றாலும், உச்ச வரம்பை கடக்காமல் இருப்பது மிக முக்கியமாகும். புதிய இதயத் துடிப்பிற்கும் ஒரு உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச வரம்பு என்பது உண்டு. உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு இது முக்கியமானதாகும். இந்த வரம்புக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இதயத்துடிப்பு இருக்குமானால் அது ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கிறது. குறிப்பாக, நீங்கள் பிரசவ காலத்தை எவ்வளவு தூரம் நெருங்கி வருகிறீர்கள் அல்லது உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கிறதா என்பதை இது உணர்த்தும். உங்கள் நாடித்துடிப்பை கணக்கிடுவதன் மூலமாக இதனை அறியலாம். ஒட்டுமொத்தமாக உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை நாடித்துடிப்பு மூலமாக கணக்கிட முடியும். தேவை ஏற்படும் பட்சத்தில் நாடித்துடிப்பை நாமாகவே கணக்கிட்டு கொள்வது குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.