hamburgerIcon

Search f

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMoreGet Mylo App

Get MYLO APP

Install Mylo app Now and unlock new features

💰 Extra 20% OFF on 1st purchase

🥗 Get Diet Chart for your little one

📈 Track your baby’s growth

👩‍⚕️ Get daily tips

OR

Cloth Diapers

Diaper Pants

Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Pregnancy Tests arrow
  • 30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil arrow

In this Article

  • அறிமுகம் (Introduction in Tamil)
  • பிரக்னன்சி டெஸ்ட் செய்ய 12 நாட்கள் போதுமானதா? (Is 12 Days Long Enough to Take a Pregnancy Test in Tamil)
  • நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய எவ்வளவு காலம் ஆகும்? (How long does it take to know you are pregnant in Tamil)
  • மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலம் (Period and Pregnancy in Tamil)
  • பிரக்னன்சி டெஸ்ட் எவ்வளவு விரைவில் பாசிட்டிவ் ஆக காண்பிக்கும்? (How soon will a pregnancy test read positive in Tamil)
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs in Tamil)
  • 1. எத்தனை நாட்களுக்குப் பிறகு சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும்? (After how many days pregnancy can be confirmed by urine test?)
  • 2. 28-நாள் சுழற்சியைக் கொண்டிருக்கும் நான் எப்போது பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க வேண்டும்? (In a 28-day cycle when can I test for pregnancy?)
  • குறிப்பு (Reference)
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

Pregnancy Tests

views icons26726

30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

அறிமுகம் (Introduction in Tamil)

நீங்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அல்லது இருக்கக்கூடாது என்று எண்ணினாலும், பிரக்னன்சி டெஸ்டை எப்போது எடுக்க வேண்டும் என்று வரும்போது உங்களுக்கு சிறிது மன அழுத்தமாக இருக்கலாம். இருப்பினும், சற்று பொறுமையாக இருங்கள். உங்கள் உடலானது மாற்றங்களுக்கு உட்பட்டு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் முடிவை அளிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். பிரக்னன்சி பரிசோதனையை முன்கூட்டியே செய்துகொள்வது தவறான முடிவுகளைத் தரக்கூடும். பிரக்னன்சியை உறுதிப்படுத்த அதிகபட்சமாக எத்தனை நாட்கள் ஆகும் மற்றும் எவ்வளவு விரைவில் பிரக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் ஆக காண்பிக்கும் போன்றவற்றை இப்போது புரிந்துகொள்வோம்.

நீங்கள் சமீபத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டீர்களா? உங்களுக்கு மாதவிடாய் தள்ளி போகிறதா? அப்படி என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக, இந்த நாட்களில் பிரக்னன்சி டெஸ்ட், குறிப்பாக மாதவிடாய் தள்ளி போன முதல் நாளில் எடுக்கப்பட்டால் மிகவும் நம்பகமானவை. நீங்கள் உடனடியாக முடிவுகளைப் தெரிந்துகொள்ள அருகில் உள்ள மெடிக்கலில் இருந்து பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை வாங்குங்கள். ஆனால் மிகச்சரியான முடிவுகளுக்கு, கருத்தரித்தல் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Article continues below advertisment

மாதவிடாய் தள்ளிப் போவதற்கு 7 நாட்கள் முன்பே பாசிடிவ் பிரக்னன்சி டெஸ்டைப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை அறிய எவ்வளவு காலம் ஆகும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான அனைத்து பதில்களும் இங்கே உள்ளன -

பிரக்னன்சி டெஸ்ட் செய்ய 12 நாட்கள் போதுமானதா? (Is 12 Days Long Enough to Take a Pregnancy Test in Tamil)

பெரும்பாலான ஆதாரங்களின்படி, ஒரு பெண்ணின் உடல் கருவுற்ற 7-10 நாட்களுக்குப் பிறகு hCG ஐ உருவாக்கத் தொடங்குகிறது. மிகவும் துல்லியமான முடிவுகளுக்கு, கருவுற்ற தேதிக்குப் பிறகு குறைந்தது 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. இந்த 2 வார காலம் hCG ஐ உருவாக்க உடலுக்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. இது உங்கள் சிறுநீர் மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறது. மேலும் துல்லியமான பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க உதவுகிறது. எனவே, 12 நாட்கள் என்பது சற்று முன்னதாக இருக்கலாம், கருவுற்ற பின்பு குறைந்தது 14 நாட்களுக்கு பிறகு பிரக்னன்சி டெஸ்ட் செய்து பார்ப்பது ஏற்றதாக இருக்கும்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய எவ்வளவு காலம் ஆகும்? (How long does it take to know you are pregnant in Tamil)

மாதவிடாய் தள்ளி போன பின்பு பிரக்னன்சியை உறுதிப்படுத்த எத்தனை நாட்கள் ஆகும் என்று யோசிக்கிறீர்களா? பொதுவாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு அல்லது தள்ளி போன முதல் நாளில் பிரக்னன்சி டெஸ்ட் செய்யுமாறு பரிந்துரைக்கின்றனர். பிரக்னன்சி டெஸ்ட் ஆனது, கருவுற்ற பின்பு கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு உடலில் வெளியிடப்படும் hCG ஹார்மோனின் அளவை அளவிடுகிறது. மிகவும் துல்லியமான முடிவுகளுக்கு, உங்கள் மாதவிடாய் தேதிக்குப் பிறகு ஒரு வாரம் வரை காத்திருக்க மருத்துவர்கள் சில சமயங்களில் பரிந்துரைக்கின்றனர்.

மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலம் (Period and Pregnancy in Tamil)

ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறு மாதிரியான மாதவிடாய் சுழற்சிகள் இருக்கும். சிலருக்கு 28 நாள் சுழற்சிகள் இருக்கும், சிலருக்கு வழக்கமான மாதவிடாய் சுழற்சி இருக்காது. 35 நாள் மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள் எப்போது பிரக்னன்சி டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? முதலில், மன அழுத்தம் கொள்ள வேண்டாம். ஒழுங்கற்ற மாதவிடாய் பொதுவானது, உங்களுக்கு 35 நாள் மாதவிடாய் சுழற்சி இருந்தால், நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டதிலிருந்து அல்லது உங்கள் கடைசி மாதவிடாய் தொடங்கிய தேதியிலிருந்து 35-36 நாட்களைக் கணக்கிடுங்கள். இந்த கட்டத்தில், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள உங்கள் உடல் போதுமான அளவு hCG ஹார்மோன்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும்.

பிரக்னன்சி டெஸ்ட் எவ்வளவு விரைவில் பாசிட்டிவ் ஆக காண்பிக்கும்? (How soon will a pregnancy test read positive in Tamil)

உங்கள் பிரக்னன்சி டெஸ்டில் குறிப்பிட்ட முடிவுகளைத் எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் ஒரு பிரக்னன்சி டெஸ்டை எப்போது எடுக்கலாம் மற்றும் எவ்வளவு விரைவில் ஒரு பிரக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ்வாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? முன்பு குறிப்பிட்டபடி, பிரக்னன்சி பாசிட்டிவாக இருக்க, கருத்தரித்தல் அல்லது கருத்தரித்தல் தேதிக்குப் பிறகு குறைந்தபட்சம் 12-14 நாட்களுக்கு பிறகு பிரக்னன்சி டெஸ்டை எடுப்பது முக்கியமாகும். பல பெண்கள் மாதவிடாய் தள்ளிப்போன முதல் நாளில் கூட பிரக்னன்சி டெஸ்டை செய்கிறார்கள். சில சமயங்களில் டெஸ்ட் முன்கூட்டியே எடுக்கப்பட்டால் நெகட்டிவாக இருக்கலாம். எனவே டெஸ்ட் எடுக்க சிறிது காலம் காத்திருப்பது நல்லது - குறைந்தபட்சம் மாதவிடாய் தள்ளிப்போன அல்லது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்ட 21-28 நாட்கள் வரை காத்திருப்பது நல்லது.

Article continues below advertisment

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs in Tamil)

1. எத்தனை நாட்களுக்குப் பிறகு சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும்? (After how many days pregnancy can be confirmed by urine test?)

கருவுற்ற பிறகு, சிறுநீர் பரிசோதனையில் காட்டக்கூடிய hCG இன் அளவை போதுமான அளவு உற்பத்தி செய்ய, உடலுக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகிறது. எனவே, கருத்தரித்த 14 நாட்களுக்குப் பிறகு சிறுநீர் பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

2. 28-நாள் சுழற்சியைக் கொண்டிருக்கும் நான் எப்போது பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க வேண்டும்? (In a 28-day cycle when can I test for pregnancy?)

கர்ப்பமாக இருக்கும்போது மனித உடலானது, hCG அல்லது மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன் போதுமான அளவு சிறுநீர் மூலம் வெளியிடப்பட்டு சிறுநீர் பரிசோதனையில் கண்டறிய கிட்டத்தட்ட 14 நாட்கள் ஆகிறது. வேறு முறையில் கூறுவதானால், இது ஒரு நபரின் 28 நாள் சுழற்சியில் கருமுட்டை (ovulation) வெளிவருவதற்கு 12-15 நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. வழக்கமாக மாதவிடாய் தள்ளிப்போன முதல் நாளில் பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பு (Reference)

Kennedy CE, Yeh PT, Gholbzouri K, (2022) Narasimhan M. Self-testing for pregnancy: a systematic review and meta-analysis

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Written by

Gajalakshmi Udayar

Get baby's diet chart, and growth tips

Download Mylo today!
Download Mylo App

RECENTLY PUBLISHED ARTICLES

our most recent articles

Image related to Medications

Medications

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

(2,310 Views)

Image related to Conception

Conception

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

(1,078 Views)

Image related to Home Remedies

Home Remedies

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

(6,238 Views)

Image related to undefined

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

(1,613 Views)

Image related to Love, Sex & Relationships

Love, Sex & Relationships

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

(3,653 Views)

Image related to Paternity Leave

Paternity Leave

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil) 

(1,285 Views)

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo

At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.