Lowest price this festive season! Code: FIRST10
Baby Care
22 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒட்டுமொத்த வளர்ச்சியில் மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாக இருக்கும் சில குழந்தைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கும். நீங்கள் எப்போதாவது அவர்களது வளர்ச்சி ஏன் மெதுவாக இருக்கிறது என்று யோசித்தது உண்டா? பல குழந்தைகளுக்கு வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள், பிறவி கோளாறுகள் இருப்பதுண்டு, ஆனால் பெரும்பாலும் அவை அவர்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடனே தான் கண்டறியப்படுகிறது.
குழந்தைகளின் கோளாறுகள் கற்றலிலோ அல்லது வளர்ச்சி சார்ந்தவையாகவோ இருக்கலாம். ஆனால் இவ்வகையான கோளாறுகள் நிறைய குழந்தைகளின் டீனேஜ் வயதிலோ அல்லது வயதுவந்த பின்னரோ கண்டறியப்படுவது சாதாரணமானது அல்ல. குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைப்பருவு கோளாறுகள் இருப்பது சகஜமே. சொல்லப்போனால், அமெரிக்காவில் மட்டும், 20% குழந்தைகள் இதுபோன்ற குழந்தை கோளாறுகள் அல்லது மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவர்களது சாதாரண வளர்ச்சிக்கு போராடிய நிகழ்வுகளும் இருக்கிறது.
இளமைப் பருவத்திலேயே குழந்தைப்பருவ கோளாறுகளை கண்டறிவதினால் குழந்தைப்பருவ கோளாறுகளினால் பெரியவராகும் வரை அவர்களது வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கோளாறுகளை கண்டறிவதினால் மட்டும் அதிலிருந்து நிவாரணம் பெற முடியாது. ஆனால், அது குழந்தை அதை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக்கொள்ள உதவும். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்தினாலும் அவர்களது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்துக்கொள்ள முடியும்.
எல்லாவற்றிற்கும் மேல், குழந்தைகள் அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்துடன் இணைந்து வாழ அவர்களுக்கு அவசியம் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். குழந்தைப்பருவ கோளாறுகள் மற்றும் குழந்தைப்பருவ மனநல கோளாறுகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
குழந்தைகளுக்குக் குழந்தைப்பருவ கோளாறுகள் என்பது அவர்களது கற்றலை பாதிக்கும் பிரச்சனையாகவோ அல்லது வளர்ச்சி திறனை பாதிக்கும் பிரச்சனையின் ரூபத்திலோ ஏற்படலாம். இவற்றில் பழக்கவழக்க பாதிப்புகள், உடல் பிரச்சனைகள் மற்றும் மொழி அல்லது கற்றல் சிக்கல்கள் ஏற்படலாம். பொதுவாக, குழந்தைப்பருவ கோளாறினால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளை ஒப்பிடுகையில் அவர்களது அன்றாட வாழ்க்கை செயல்பாட்டில் ஏராளாமான பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். பொதுவாக குழந்தைப்பருவ கோளாறுகள் குணப்படுத்தமுடியாதவை. அவை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடருந்தாலும், அதை எப்படி கையாளுவது என்பதை அந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
பொதுவான குழந்தைப்பருவ கோளாறுகளில் பழக்கவழக்க பிரச்சனைகள், பதற்றம், ADHD மற்றும் மனஅழுத்தம் போன்றவை அடங்கும். பெரும்பாலான குழந்தைகள் இத்தகைய மனநல கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். பிற குழந்தைகள் ஆட்டிசம், அறிவுசார் இயலாமை அல்லது நடத்தை கோளாறினால் பாதிக்கப்படலாம்.
நல்ல செய்தி என்னவெனில் இவை அனைத்தும் குழந்தைப்பருவ கோளாறுகளாக வகைப்படுத்தப்பட்டாலும், அவற்றை கையாளும் முறைகளை குழந்தைகள் கற்றுக்கொண்டால் அவர்களது நிலைகளை மிகுந்த அறிவாற்றலுடன் புரிந்துக்கொண்டு இந்த சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.
இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?
குழந்தைக் கோளாறு பிரச்சனை ஏற்படும் குழந்தைகளிடம் பல அறிகுறிகளை பார்க்கலாம். குழந்தைக் கோளாறு ஒவ்வொரு குழந்தையின் நிலையைப் பொறுத்து மாறுப்பட்டாலும், பின்வரும் சில பொதுவான அறிகுறிகளும் ஏற்படலாம் -
என்னதான் குழந்தை கஷ்டப்பட்டு படித்தாலும் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்தல்
மற்றவர்களுடன் பழகக்கூடிய திறமின்மை
பள்ளியில் ஒழுங்காக செயல்பாடுகளை செய்யமுடியாதது அல்லது தொடர் எரிச்சல்
எப்போதும் வருத்தமாக அல்லது சோகமாக காணப்படுதல்
அதீத உணர்ச்சிவசப்படுதல்
மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தமுடியாத பழக்கவழக்கம்
அவரையே காயப்படுத்திக்கொள்ளுதல் அல்லது ஒருவரை காயப்படுத்துவது பற்றி பேசுதல்; தற்கொலை அல்லது சாவு பற்றி பேசுதல்
மற்றவர்களுடன் கலந்துரையாடுவதை தவிர்த்தல்
அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல்
தொடர்ந்து பதட்டமடையும் உணர்வு, மனஅழுத்தம் அல்லது கோபம்
பழங்கால அல்லது சம்பந்தமில்லாதவற்றை பேசுதல், யோசித்தல்
எண்ணம், பழக்கவழக்கம், சாப்பாடு அல்லது தூக்க பழக்கத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்
குழந்தைப்பருவ கோளாறுகள் குழந்தைக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றியிருக்கும் குடும்பத்தினருக்கும் சவலானதாகவே இருக்கும், ஆனால் இதில் நல்ல செய்தி என்னவெனில் அவற்றிற்கு தக்க சிகிச்சை வழங்க முடியும். குழந்தைப்பருவ கோளாறுக்கு தீர்வு இல்லாவிட்டாலும், குழந்தைகள் அதை கையாளும் முறைகளை கற்றுக்கொண்டு அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். கோளாறின் வகை பொறுத்து, மருத்துவர்கள் மற்றும் தெரபிஸ்ட்கள் அடிக்கடி அவர்களுக்கு அறிவாற்றல் நடத்தைக்கான சிகிச்சை அல்லது மருந்துகளை பரிந்துரை செய்யலாம். பொதுவான குழந்தை கோளாறுகளுடன் தொடர்புடைய சிகிச்சையை பற்றி பார்ப்போம்:
குழந்தைப்பருவ கோளாறுகள் என்று வரும் போது, குழந்தைக்கு மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் ஆன்டி-டிப்ரசண்ட்ஸ் அல்லது மனதை அமைதிப்படுத்தும் ஸ்டெபிளைசர் வடிவில் மருந்துகளை பரிந்துரை செய்யலாம். மனது உடைந்த கஷ்டப்படும் குழந்தைகள் மற்றும் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு ஆன்டிசைக்கோடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. மறுபடியும், இது முற்றிலும் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் மனரீதியான பாதிப்பை பொறுத்தது.
அடிக்கடி குழந்தைகள் அவர்களது பழக்கவழக்கத்தை நெறிப்படுத்த தெரபிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களது அறிவாற்றல் திறன் அல்லது ஒருவருக்கொருவருடன் தொடர்பு கொள்ளும் திறனுக்கும் தெரபி வழங்கப்படலாம்.
குழந்தைகளுக்கு சைக்கோமதிப்பாய்வு, ஆதரவளிக்கும் சைக்கோதெரபி அல்லது சைக்கோடைனமிக் சைக்ப்தெரபி போன்றவை செய்யப்படுமாறு கேட்கப்படலாம்.
எதிர்பாராதவிதமாக, பிறந்ததிலிருந்து குழந்தைகள் குழந்தைக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோளாறுகள் மரபு ரீதியாகவும் அல்லது பிறப்பில் ஏற்படும் பிரச்சனையாலோ இருக்கலாம். குழந்தைகள் உணர்வுபூர்வமான டிரௌமா அல்லது வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மனஅழுத்தம். குழந்தையின் மூளையில் கெமிக்கல்களின் சமமின்மை அல்லது வாழ்க்கையின் ஆரம்பத்தில் குழந்தைக்கு மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றாலும் குழந்தைப்பருவ கோளாறு ஏற்படலாம். வாழ்க்கை அனுபவங்களால் ஏற்படும் மனஅழுத்தம், அடிமைத்தனம் அல்லது இழப்பு போன்ற மற்ற காரணிகளும் ஆரம்பக்காலத்தில் குழந்தைக்கு வலுவான மனநல கோளாறை ஏற்ப்படுத்தும். கர்ப்ப காலத்தில் வைரசுகள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு குழந்தைக் கோளாறு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.
References
1. Scott JG, Mihalopoulos C, Erskine HE. (2016). Childhood Mental and Developmental Disorders. In: Patel V, Chisholm D, Dua T, et al., editors. Mental, Neurological, and Substance Use Disorders: Disease Control Priorities.
2. Reiss AL. (2009). Childhood developmental disorders: an academic and clinical convergence point for psychiatry, neurology, psychology and pediatrics. J Child Psychol Psychiatry.
Tags
What is Childhood Disorder in Tamil, Symptoms of Childhood Disorder in Tamil, Treatment of Childhood Disorder in Tamil, Causes of Childhood Disorder in Tamil, Childhood Disorders in English, Childhood Disorders in Hindi, Childhood Disorders in Telugu, Childhood Disorders in Bengali
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் தாய்வழி - கரு மருத்துவத்தின் முக்கியத்துவம் |Importance of Maternal - Fetal Medicine in High Risk Pregnancies in Tamil
கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil)
கர்ப்ப காலத்தில் சீதாப்பழம்: நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Custard apple during pregnancy: Benefits & risks In Tamil)
கர்ப்ப காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Sweet Potato During Pregnancy in Tamil)
கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil
உடலுறவுக்குப் பிறகு எத்தனை நாட்களில் கருவுற்றத்தை சோதனை செய்யவேண்டும்? (After how many days of sex can you check for pregnancy In Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |