Lowest price this festive season! Code: FIRST10
Care for Baby
8 June 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
வெப்பமான கோடைக்காலங்களில் முதல் குளிர்ந்த குளிர்காலம் வரையிலான மாறும் பருவநிலையால், ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் தொடர் பராமரிப்பும் கவனிப்பும் அவர்களுக்கு அதிகம் தேவை.
உங்கள் குழந்தைக்கு உடை என்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெளியில் போக திட்டமிட்டால், உங்கள் குழந்தைக்கு கூடுதல் ஆடைகளை போட்டுவிடுங்கள். இது உங்கள் குழந்தைக்கு கூடுதல் சௌகரியதைக் கொடுக்கும், நீங்களும் பதற்றமடையாமல் நிம்மதியாக இருக்கலாம்.
இது மிகவும் முக்கியமான ஒன்று. தேவையான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடவேண்டிய நேரம் குறித்து ஒரு குறிப்பை வைத்திருங்கள். இது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தேவையற்ற நோயிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பருவநிலையில் ஏற்படும் மாற்றம் அதனுடன் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே, சரியான பராமரிப்பு மற்றும் சரியான டயப்பரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உங்கள் குழந்தைக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதற்கு, டிஸ்போஸபிள் மற்றும் துணி டயப்பர்களின் நன்மை தீமைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தையின் சருமத்தில் குறைவாக எரிச்சலை ஏற்படுத்தும் டயப்பருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கூடுதலாக, உங்கள் குழந்தையின் பின்பகுதியை காற்றோட்டமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி விடவும்.
நீங்கள் சரியான கவனிப்பை மேற்கொள்ளாவிட்டால் மாறிவரும் பருவத்தில் குளிப்பது ஆபத்தாக மாறும். குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவர்களுக்கு எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படாமல் இருக்க பிற்பகல் குளிக்க வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - புதிய அம்மாக்களுக்கான நேர மேலாண்மை
மாறிவரும் பருவநிலை காரணமாக ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தைக்கு உதவ, தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த சமச்சீர் உணவை கொடுக்கவும்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க சமச்சீர் உணவும் முக்கியமானது.
சுகாதாரத்தில் சமரசம் செய்யாதீர்கள், மேலும் உங்கள் குழந்தை இருக்கும் அறையை நன்கு சுத்தம் செய்வதை உறுதிப்படுத்தவும். இறுதியாக, வருமுன் காப்பதே சிறந்தது, ஆனால் மிகவும் கவலைப்படாதீர்கள், நோய்வாய்ப்பட்டு குணமடைவது வளர்ந்து வரும் பருவத்தின் ஒரு பகுதியாகும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
குழந்தை தூங்குவதற்கு உதவ பேசிஃபையர்களைப் பயன்படுத்துவது சரியா?
உங்களுடைய குழந்தையை எளிதில் தூங்க வைப்பதற்கான டாப் 3 டிப்ஸ்
குழந்தைகளுடைய பாட்டில் ஸ்டெர்லைசரில் பூஞ்சை வராமல் தடுக்கும் வழிகள்
குறுநடை போடும் குழந்தையை எவ்வாறு தனியாக தூங்க ஊக்குவிப்பது
இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்
புதிதாக பிறந்துள்ள உங்கள் குழந்தையை அவர்களின் மூத்த சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |