hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • பொய்க் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன I What Are the Causes & Symptoms of A False Pregnancy in Tamil? arrow

In this Article

    பொய்க் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன I What Are the Causes & Symptoms of A False Pregnancy in Tamil?

    Pregnancy

    பொய்க் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன I What Are the Causes & Symptoms of A False Pregnancy in Tamil?

    9 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பொய்க் கர்ப்பம் அல்லது கர்ப்பமாயை (சூடோசைசிஸ்) (False Pregnancy or Pseudocyesis in Tamil)

    குழந்தையை சுமக்கவில்லை என்ற போதிலும் குழந்தையை எதிர்பார்க்கும் நம்பிக்கையை பொய்க் கர்ப்பம் அல்லது சூடோசைசிஸ் எனலாம். இது உண்மையற்ற கர்ப்பம், மருட்சி கர்ப்பம் அல்லது மிகையுணர்வுக் கர்ப்பம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பொய்க் கர்ப்பம் கொண்ட பெண்களுக்கு பல கர்ப்ப அறிகுறிகள் தோன்றலாம், ஆனால் கருப்பையில் ஒரு உண்மையான கருவின் இருக்கும் அறிகுறி தவிர.

    சில அரிதான சந்தர்ப்பங்களில், ஆண்களும் கூவேட் சிண்ட்ரோம் அல்லது ஒத்துணர்வுடைய கர்ப்பம் எனப்படும் கர்ப்பம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.

    பொய்க் கர்ப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of False Pregnancy in Tamil)

    பல்வேறு உளவியல் மற்றும் உடல் ரீதியான காரணங்கள் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறான நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

    பொய்க் கர்ப்பத்துக்கு வழிவகுக்கும் உளவியல் ரீதியிலான காரணங்கள் (Psychological Causes that lead to False Pregnancy )

    1) ஒரு பெண்ணுக்குக் கர்ப்பமாக வேண்டும் என்ற விருப்பம் தீவிரமானதாக இருந்தால், அவளது உடல் கர்ப்பம் உருவானது போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம். கருவுறாமை, மீண்டும் மீண்டும் ஏற்படும் கருச்சிதைவுகள், திருமணத்தில் தாமதம் அல்லது எக்கணமும் நிகழவுள்ள மாதவிடாய் நிறுத்தம் போன்றவை இப்படிப்பட்ட தீவிர ஆசைக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகள் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது, உப்பிய வயிறு, பெரிதான மார்பகங்கள் மற்றும் சில சமயங்களில் கருவின் அசைவுகளின் உணர்வு போன்ற அறிகுறிகள் தென்பட வழிவகுக்கிறது. பெண்ணின் மூளை அந்த அறிகுறிகளை கர்ப்பம் என நம்புகிறது, இதன் விளைவாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோலாக்டின் போன்ற ஹார்மோன்கள் பரஸ்பரம் வெளியிடப்படுகின்றன, அவை தவறான கர்ப்ப அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

    2) ஏழ்மை, கல்வியின்மை, குழந்தை பருவ பாலியல் துஷ்பிரயோகம் அல்லது உறவுசார் பிரச்சனைகள் பொய்க் கர்ப்பம்ச் பிரச்சனையைத் தூண்டலாம்.

    3) உளச்சோர்வு கூட ஒரு பெண்ணை கர்ப்பமாக இருப்பதாக நம்புவதற்கு வழிவகுக்கும். ஆன்டிசைகோடிக் மருந்துகள் கர்ப்பம் போன்ற அறிகுறிகளை மேலும் தூண்டும் புரோலாக்டின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.

    4) ஸ்கிசோஃப்ரினியா, ஆளுமைக் கோளாறுகள் அல்லது மனநிலைக் கோளாறுகள் போன்ற பிற மன உளைச்சல்களும் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதாகத் தவறான கருத்துக்கு வழிவகுக்கும்.

    5) மன அழுத்தம், பயம், எதிர்பார்ப்பு அல்லது பிற உணர்வுசார் தொந்தரவுகள் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து வயிறு உப்புதல், கரு அசைவு போன்ற உணர்வு மற்றும் பிரசவம் போன்ற உணர்வு போன்ற கர்ப்ப அறிகுறிகளைத் தூண்டவழிவகுக்கிறது

    பொய்க் கர்ப்பத்தை விளைவிக்கும் உடல்சார் காரணங்கள் (Physical Causes that cause False Pregnancy)

    1) நோய்த் தன்மை கொண்ட உடல் பருமன் கர்ப்பத்தைப் பிரதிபலிக்கும்.

    2) கருப்பை அல்லது பிட்யூட்டரி கட்டிகள் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோலாக்டின் அளவு அதிகரிக்கிறது, இது கர்ப்பம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

    3) பித்தப்பைக் கற்கள், வயிற்றுக் கட்டிகள், மலச்சிக்கல், குழாய் நீர்க்கட்டிகள் போன்ற மருத்துவ நிலைகள் கர்ப்பத்தைப் பிரதிபலிக்கும் அல்லது கர்ப்பம் போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம்.

    ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப பரிசோதனை நோயாளியை அவள் கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைக்கிறது (False Positive Pregnancy Test leads the patient to believe that she's pregnant in Tamil)

    ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப பரிசோதனையானது, உண்மையில் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் கர்ப்பமாக இருப்பதாக நம்புவதற்கு வழிவகுக்கும்.

    ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப பரிசோதனைக்கான வாய்ப்புகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன.

    1) இரசாயன கர்ப்பம் (Chemical Pregnancy)

    கருப்பைச் சுவரில், கருவுற்ற முட்டை அல்லது கரு பொருத்தி வளர முடியாதபோது இது நிகழ்கிறது.

    2) எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy)

    கருவுற்ற முட்டையானது ஃபாலோபியன் குழாய் அல்லது கருப்பை வாய், கருப்பை அல்லது வயிற்றுக் குழியில் எங்காவது பொருத்தப்படும் போது இது நிகழ்கிறது. இது உடனடி மருத்துவத் தலையீடு தேவைப்படும் அவசரநிலையாகக் கருதப்படவேண்டும்.

    3) சமீபத்திய கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு (Recent Miscarriage or Abortion )

    இந்த சந்தர்ப்பங்களில், இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள எச்சிஜி (hCG) அளவுகள் பொதுவாக ஆறாவது வாரம் வரை உயர்வது போல மேல்நோக்கிய போக்கில் இருக்கும். இந்த சந்தர்ப்பங்களில் அல்ட்ராசவுண்ட் மற்றும் அடுத்தடுத்த D/C தேவைப்படுகிறது.

    4) பயனர் பிழை (User Error)

    சுய-பயன்பாட்டு கர்ப்ப பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முழுமையாக ஏற்ககூடியவை அல்ல. வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாவிடில் ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப முடிவுக்கு வழிவகுக்கும்.

    5) மருந்துகள் (Medications)

    கருவுறுதல் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்களின் இரத்தத்தில் உள்ள செயற்கை எச்சிஜி (hCG) காரணமாக ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப பரிசோதனை முடிவைப் பெறலாம்.

    6) மோலார் கர்ப்பம், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக நோய்கள் அல்லது கருப்பை அல்லது பிட்யூட்டரி புற்றுநோய் போன்ற மருத்துவ நிலைமைகள் தவறான நேர்மறை கர்ப்ப பரிசோதனைகளுக்கு வழிவகுக்கும்.

    பொய்க் கர்ப்பத்தின் அறிகுறிகள் (Symptoms of False Pregnancy in Tamil)

    பொய்க் கர்ப்பத்தின் அறிகுறிகள் கர்ப்பம் அடைந்தது போன்றே இருக்கும்.

    1) விரிந்த அல்லது உப்பிய வயிறு. உண்மையான கர்ப்பத்தில் தொப்புள் உள்ளிருந்து வெளியே இருப்பதற்கு மாறாக தொப்புள் தலைகீழாக இருக்கும்.

    2) மாதவிடாயின் தடை அல்லது தாமதம்.

    3) அதிகரித்த அளவு மற்றும் மென்மையான மார்பகங்கள் முலைக்காம்புகளில் ஏற்படும் மாற்றங்களுடன் சில சமயங்களில் பால் சுரப்பும் ஏற்படும்.

    4) கருவின் இயக்கங்களின் உணர்வு, சுருங்கி விரிவது போல்

    5) எடை அதிகரிப்பு.

    6) குமட்டல் மற்றும் வாந்தி.

    7) அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

    8) அடிக்கடி பசி

    9) போலி தாய்மையுணர்வை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான அறிகுறியான அப்டமினல் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட், கரு இல்லாததைக் காட்டும்.

    10) நெகடிவ் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை முடிவும் போலி தாய்மையுணர்வை உறுதிப்படுத்தும்.

    பொய்க் கர்ப்பத்திற்கான சிகிச்சை (Treatment of False Pregnancy in Tamil)

    *ஒரு பெண் கர்ப்பமாக இல்லை என்பதை நம்ப வைக்க ஒரே மற்றும் சிறந்த வழி, கரு இல்லாததை உறுதிப்படுத்தும் அல்ட்ராசவுண்ட் இமேஜ் மட்டுமே. பொய்க் கர்ப்பம் என்பது வெறும் மாயை என்பதால், சிகிச்சை மற்றும்/அல்லது மருந்து ஏதும் தேவையில்லை.

    *மாதவிடாய் ஒழுங்கின்மை ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.

    *கருப்பை அல்லது பிட்யூட்டரி கட்டிகள் அல்லது நோய் தன்மை கொண்ட மலச்சிக்கல் போன்ற பிற மருத்துவ நிலைகளால் பொய்க் கர்ப்பம் ஏற்படும் போது, அதற்குச் சிகிச்சை மேற்கொள்வது கர்ப்பம் போன்ற அறிகுறிகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.

    *உளவியல் உறுதியற்ற தன்மை மற்றும் தீவிர உளச்சோர்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பிரச்சனையைத் தீர்க்க உதவும்.

    சுருக்கம் (Summary)

    பொய்க் கர்ப்பம் என்பது நோயாளிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ஆகும். நோயாளி உண்மையை அறியும்போது உணர்வு பூர்வமாக பாதிக்கப்படலாம்.

    ஃபால்ஸ் பாசிடிவ் கர்ப்ப பரிசோதனை முடிவுகள் மட்டுமே பிரச்சினை அல்ல. ஃபால்ஸ் நெகடிவ் கர்ப்ப பரிசோதனை முடிவுகளும் கர்ப்பமாக உள்ள பெண்ணைக் கர்ப்பமாக இல்லை என்று நம்புவதற்கு வழிவகுக்கிறது,

    ஃபால்ஸ் நெகடிவ் கர்ப்ப பரிசோதனை முடிவுக்கு வழிவகுக்கும் பல்வேறு காரணங்கள்:- (The various causes that lead to false negative pregnancy test are):-

    1) சோதனை முன்கூட்டியே எடுக்கப்படுதல். பொதுவாக, மாதவிடாய் தவறிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஹோம் கிட் சோதனையை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

    2) சோதனை முடிவுகளை மிக விரைவில் சோதித்தல். இரண்டாவது இளஞ்சிவப்பு அல்லது நீலக் கோட்டின் தோற்றத்திற்குத் தேவையான நேரத்தைக் குறிப்பிடும் அறிவுறுத்தல் கிட் உடன் வழங்கப்படுகிறது. அந்த நேரம் வரை காத்திருக்கவில்லை என்றால், அது ஃபால்ஸ் நெகடிவ் கர்ப்ப பரிசோதனை முடிவுக்கு வழிவகுக்கும்.

    3) அதிக தண்ணீர் குடிப்பது ஃபால்ஸ் நெகடிவ் கர்ப்ப பரிசோதனைக்கு வழிவகுக்கும்.

    4) கர்ப்ப பரிசோதனை கருவிகளின் தவறான பயன்பாடு.

    5) தவறான மாதவிடாய் சுழற்சி ஃபால்ஸ் நெகடிவ் கர்ப்ப பரிசோதனைக்கு வழிவகுக்கும்.

    6) நீர்த்த எச்சிஜி (hCG) அளவுகள் முடிவுகளைத் தவறாக வழிநடத்தும்.

    கர்ப்ப அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கும் போது அல்லது கர்ப்ப சோதனைக்கான ஹோம் கிட் கொண்டு சோதிக்கும் போது அறியும் முடிவு என்னவாக இருந்தாலும், ஆய்வக சோதனை மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, மருத்துவ நிபுணருடன் தொடர்பு கொள்வது, சந்தேகங்களைத் தீர்த்து, சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவும்.

    References

    Ibekwe PC, Achor JU. (2008). Psychosocial and cultural aspects of pseudocyesis. www.ncbi.nlm.nih.gov

    Tags;

    What is False Pregnancy or Pseudocyesis in Tamil, Causes of False Pregnancy in Tamil, Physical causes for False Pregnancy in Tamil, Treatment of False Pregnancy in Tamil, What Are the Causes & Symptoms of A False Pregnancy in English

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Priya Baskar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Pregnancy Complications

    Pregnancy Complications

    எக்டோபிக்/ இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன - அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, தடுப்பு & அதை எவ்வாறு கண்டறிவது? What is Ectopic Pregnancy - Symptoms, Causes, Treatment, Prevention & How to Detect it in Tamil?

    Image related to Breastfeeding & Lactation

    Breastfeeding & Lactation

    உங்கள் கர்ப்ப காலத்திலும் பின்னும் நர்சிங் பேட்களின் பயன்பாடு என்ன I What Is the Use of Nursing Pads During & After Your Pregnancy in Tamil?

    Image related to maternityy

    maternityy

    கர்ப்ப காலத்தில் பிரா அணிவதால் சரும நமைச்சல் ஏற்படுவது ஏன்? I Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in Tamil?

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    மகப்பேறு ப்ரா வாங்கும் போது என்ன வகையான துணிகள் மற்றும் ஸ்டைல்கள் பார்க்க வேண்டும் I What Kind Of Fabrics And Styles To Look For While Shopping For A Maternity Bra in Tamil

    Image related to Skin Changes

    Skin Changes

    உங்கள் சரும பராமரிப்பு முறையில் தேயிலை மர எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? I How to include tea tree in your face care regime in Tamil?

    Image related to Labour Pain

    Labour Pain

    கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு உதவும் உணவுகள் I Foods that Can Help Pregnant Women Go into Labor in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.