Lowest price this festive season! Code: FIRST10
Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
யாரோ மிகச் சரியாகச் சொன்னார்கள்: ஓர் இன்டிமேட் ஹைஜின் வாஷ் என்பது ஒரு பெண்ணின் சிறந்த தோழி என்று! பிறப்புறுப்பு ஈரப்பதமாக இருப்பதால் அந்தப் பகுதியில் பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பகுதியை அமிலத் தன்மையுடன் வைத்திருப்பதே நோய்க்கிருமிகளை எதிர்க்க சிறந்த வழியாக இருக்கும்.
இந்த அமிலம் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பெண்களுக்கான மிகவும் பொருத்தமான இன்டிமேட் வாஷ் இந்த பிஎச் அளவை 3.5 முதல் 4.5 வரை வைத்திருக்க உதவும்.
பிறப்புறுப்பில் துர்நாற்றம், அரிப்பு, வறட்சி மற்றும் எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பின் ஒட்டுமொத்த பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஓர் இன்டிமேட் வாஷ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
ஓர் இன்டிமேட் ஹைஜின் வாஷ் வாங்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய சில அத்தியாவசியமான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவருடன் கலந்தாலோசிப்பது சிறந்த இன்டிமேட் வாஷை உங்களுக்கு வாங்க உதவும். இது பாதுகாப்பை உறுதி செய்வதோடு நன்மை தீமைகளை புரிந்துகொள்ளவும் உதவும். சில முக்கியமான குறிப்புகள்:
ஓர் இன்டிமேட் வாஷ் வாங்கும் போது விலை மிக முக்கியமான காரணி அல்ல. சில நேரங்களில் மலிவான பொருட்கள் கூட பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். இயற்கை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். வண்ணம் அல்லது நறுமணம் போன்ற செயற்கை பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இயற்கையான பொருட்களுக்கு எப்போதும் இங்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
செயற்கை மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் தொற்று, வீக்கம் அல்லது நச்சுகளின் வளர்ச்சியை அது ஏற்படுத்தக்கூடும். இது உங்களுக்கு எந்த செளகரியத்தை வழங்குவதையும் விட அதிக தீங்குதான் விளைவிக்கும்.
அத்தகைய தயாரிப்புகளில் ஈரத்தன்மை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. அனைத்து இன்டிமேட் ஹைஜின் வாஷ் பொருட்களும் சென்சிடிவ் பகுதிகளை ஈரப்பதமாக்குவதில்லை. இது அரிப்பு மற்றும் வறட்சியையும் ஏற்படுத்தும். பெண்கள், குறிப்பாக கோடைக்காலத்தில், அதிக வியர்வை காரணமாக இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அத்தகைய சூழ்நிலையில், வியர்வை மற்றும் அழுக்குகளை அகற்றும் பொருட்களை பயன்படுத்தினால். அது சென்சிடிவான பகுதிகளில் ஈரப்பதமின்மையை ஏற்படுத்திவிடும். அது நீண்ட கால நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தவும் வழிவகுத்துவிடும். எனவே, கிளிசரின் அல்லது ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ள இன்டிமேட் வாஷ் வகைகளைத் தேர்ந்தெடுப்பது இங்கே கட்டாயமாகிறது.
இதுபோன்ற இன்டிமேட் ஹைஜின் வாஷ் தயாரிப்புகள் அவ்வளவு பிரபலமில்லாமல் இருந்தபோது சோப்புகள் பயன்படுத்தப்பட்ன. இன்டிமேட் ஹைஜின் வாஷ் தயாரிப்புகள் அப்போது உற்பத்தி செய்யப்படவில்லை அல்லது விளம்பரப்படுத்தப்படவில்லை மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படவுமில்லை. எனவே, அத்தகைய தயாரிப்புகள் சந்தைக்கு வந்தபோது, பிஎச் பேலன்ஸ் மற்றும் அமிலத் தன்மையை மெயின்டெயின் செய்வது முக்கியமான பயன்பாடாக இருந்தது. எனவே, சோப்பு இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். இது வறட்சியை ஏற்படுத்தாது மற்றும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இயற்கை பொருட்கள்தான் பயன்படுத்த சிறந்தவை. சில இன்டிமேட் ஹைஜின் வாஷ் செயற்கை வாசனை திரவியங்களை கொண்டுள்ளது. இது இறுதியில் நச்சுகளை உருவாக்கி, சருமத்தை கருமையாக்கும்.
பெண்களுக்கான ஓர் இன்டிமேட் வாஷ் வாங்கப்படும்போது இந்த குறிப்புகளை எல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும். எனவே, மைலோ கேர் இன்டிமேட் வாஷ் போன்ற பெண்களுக்கான சிறந்த ஹைஜின் வாஷ் தயாரிப்புகள், சென்சிடிவான பகுதியில் கிருமிகள் மற்றும் வியர்வையை நீக்கி, நச்சுகளை அகற்றுகிறது.
இது சரியான பிஎச் அளவு மற்றும் அமிலத் தன்மையை மெயின்டெயின் செய்ய உதவுகிறது. இத்தகைய பொருட்கள் ஒரு செயற்கை வாசனையை உருவாக்க பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஏற்கனவே உள்ள நச்சுப் பொருட்களுடன் கலந்து நன்மையை விட அதிக தீங்குகளை உருவாக்கக்கூடும்.
அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். ஓர் இன்டிமேட் வாஷை ஒருபோதும் அதிகமாக எடுத்து பயன்படுத்தாதீங்க. இது முக்கியமான பாயிண்ட்டாக நினைவில் கொள்ளுங்க. தனிப்பட்ட சுகாதாரத்தின் கூடுதல் பகுதியாக இது பேலன்ஸ் செய்யப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக இன்டிமேட் வாஷைப் பயன்படுத்தினால், அது அந்தப் பகுதியில் வறட்சியை ஏற்படுத்தி, எரிச்சலை ஏற்படுத்தும்; நீண்ட கால பயன்பாடு அந்தப் பகுதியில் அதிக சேதத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரிடம் முறையான ஆலோசனையைப் பெற்ற பிறகு, அதை மிதமான அளவு பயன்படுத்துவது அவசியமாகிறது.
மலத்தை வெளியேறும் பகுதியில் உள்ள கிருமிகள் பிறப்புறுப்பு பகுதியை அடைவதைத் தடுக்க, சிறிய அளவில் பிறப்புறுப்புப் பகுதியில் இதை பயன்படுத்த வேண்டும். சரியாக குறைந்த அளவு எடுத்து பயன்படுத்திய பிறகு, அதை முழுமையாக கழுவ வேண்டும்.
முழுவதுமாக கழுவிய பிறகு, அதை ஒரு மென்மையான துண்டைப் பயன்படுத்தி நன்கு துடைக்க வேண்டும். இதை வாரத்தில் சில நாட்கள் அல்லது தினமும் குளிக்கும்போது கூட செய்யலாம். மாதவிடாய் நாட்களில், இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது இது இயற்கையான சுத்திகரிப்பு முறையைத் தடுத்துவிடுகிறது.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகான பிறப்புறுப்பு தொற்று( பியூர்பெரல் செப்சிஸ்): அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை
மாதவிடாய் நாட்களில் இயற்கையான சுத்திகரிப்பு பொருட்களுடன் பேடுகள் அல்லது டேம்பன்ஸை மாற்றுதல் மற்றும் நல்ல டயட் ஆகியவை ஹெல்த்தியான தனிப்பட்டசுகாதாரத்திற்கு அத்தியாவசியமானதாகும்.
மாதவிடாய் நாட்களில் ஓர் இன்டிமேட் வாஷை சுடு தண்ணீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். கூடுதலாக, ஒரு துண்டைப் பயன்படுத்தி துடைத்தல் மற்றும் ஹெல்த்தியான டயட்டை பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் மாதவிடாய் ஒழுங்குமுறையின்மையை ஏற்படுத்தாமல் தடுக்கும்.
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |